அவளுக்கு வாய் இருந்தா எனக்கு வாய் இல்லையா? வார வாரம் சண்டை போடும் தாமரை.. இப்போ யார் கூட தெரியுமா?

சென்னை: தான் ஒரு அப்பாவி என்பது போலவே முகத்தை வைத்துக் கொண்டு பிக் பாஸ் சீசன் 5 தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு போட்டியாளர்களுடன் சண்டை போட்டு வரும் தாமரை மீண்டும் சண்டையை ஆரம்பித்துள்ளார்.

நமீதா மாரிமுத்து, இசைவாணி, பாவனி, சுருதி என நீண்ட லிஸ்ட்டில் தற்போது மதுமிதாவும் இணைந்துள்ளார்.

கடந்த வாரம் அடக்கம் மற்றும் ஆடை பற்றிய பிரச்சனை ஆரம்பித்த நிலையில், இன்றைய மூன்றாவது புரமோவில் 'அவ.. இவ' பிரச்சனை வெடித்து உள்ளது.

கோபப்பட்ட குழந்தை

கோபப்பட்ட குழந்தை

அபிஷேக் ராஜாவையே 'டாடி' என அழைத்து வந்த குழந்தை மதுவே இன்றைய எபிசோடில் கோபப்பட்டு இருப்பதை தற்போது வெளியான மூன்றாவது புரமோவில் பார்த்த ரசிகர்கள் ஷாக்காக்கி உள்ளனர். தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களிடம் சண்டை போட்டு வரும் தாமரை மதுவிடமும் சண்டையை ஆரம்பித்துள்ளார்.

கெட்டவார்த்தை இல்லை

கெட்டவார்த்தை இல்லை

தமிழே திக்கித் திக்கி பேசும் ஜெர்மனியில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த மதுமிதா பேசியதை கேட்டு எதுக்கு இப்போ "அவ இவ" என பேசுற என தாமரை செல்வி புதிய பிரச்சனையை கிளப்ப.. "அவ" கெட்டவார்த்தை இல்லை என பதிலுக்கு மது வாய் திறந்து பேச ஆரம்பமானது அடுத்த பிரச்சனை.

என் தொண்டையே அப்படிதான்

என் தொண்டையே அப்படிதான்

நீங்க தான் முதல்ல சொன்னீங்க என மதுவுக்கு தாமரை மரியாதை கொடுக்காமல் பேசியதை குறிப்பிட்ட மதுவிடம் நான் அப்படி தான் பேசுவேன்.. ஏன் என்னல.. என் தொண்டையே அப்படித்தான் என சத்தம் போட்டு சண்டையை பயங்கரமாக தாமரை ஸ்டார்ட் பண்ண "நீங்க யாரு சத்தம் போட" என மதுவும் ஒரு பிடி பிடித்துள்ள அதிரடியான 3வது புரமோ வெளியாகி உள்ளது.

கம்யூனிகேஷன் பிரச்சனை

கம்யூனிகேஷன் பிரச்சனை

கிராமத்து பெண்ணான தாமரை செல்வி இப்படி தொடர்ந்து நமீதா மாரிமுத்து, இசைவாணி, பாவனி, சுருதி மற்றும் மதுவிடம் சண்டை போடுவதற்கு காரணம் அவருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே இருக்கும் கம்யூனிகேஷன் பிரச்சனையா? என்கிற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

தாமரையை காப்பாற்ற

தாமரையை காப்பாற்ற

கடந்த வாரம் நடந்த டிரெஸ்சிங் ரூம் பிரச்சனை காரணமாக தாமரை செல்வியை பலரும் நாமினேஷன் செய்வார்கள் என நினைத்து அவரை சேவ் பண்ணவே சுருதி உள்ளிட்ட பல போட்டியாளர்கள் திங்கட் கிழமை எபிசோடில் வெடி வெடித்தனர். ராஜு ஜெயமோகனும் நேரடியாகவே தாமரைக்கு புரியும் படி உங்களை மாற்றிக் கொள்ளவும் பார்ப்பவர்களுக்கு வேறு மாறி தெரியும் என்றும் கிளாஸ் எடுத்தார்.

கன்டென்ட் கொடுக்கிறார்

கன்டென்ட் கொடுக்கிறார்

வார வாரம் இப்படி பிரச்சனை பண்ணி கமல் பஞ்சாயத்து நடத்த நல்லாவே தாமரை செல்வி கன்டென்ட் கொடுக்கிறார் என்றும் சின்ன பொண்ணு போல தாமரையிடம் சகிப்புத் தன்மையே இல்லாதது தான் இத்தனை சண்டைகளுக்கும் காரணம் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

ஷோ பார்த்தால் தான்

ஷோ பார்த்தால் தான்

வெறும் புரமோவை பார்த்து விட்டு எந்தவொரு முடிவுக்கும் வந்து விட முடியாது. உண்மையிலேயே ஷோவை பார்த்தால் தான் யார் பிரச்சனையை ஆரம்பித்தார் என்பது தெரிய வரும். பாவனி மற்றும் சுருதி கேங்கில் சமீபத்தில் ஐக்கியமான மதுமிதா இனியும் மெளனமாக இருந்தால் நம்மை வெளியே அனுப்பி விடுவார்கள் என்பதற்காக வாய் திறக்க ஆரம்பித்து இருக்கிறாரா? என்பதும் எபிசோடில் பார்த்தால் தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X