படுக்கையில் கட்டிப் புரண்ட தாமரை மற்றும் பிரியங்கா.. அப்படி சண்டை போட்டவங்களா இப்படி மாறிட்டாங்க?
சென்னை: இனிமேல் அவகூட பேசவே மாட்டேன் என சொன்ன பிரியங்கா தாமரை சொன்ன அந்த ஒரு வார்த்தையால் அப்படியே மாறி அவரை கட்டிப் புரளும் காட்சிகள் ரெட்கார்டு கேட்டு சண்டை போட்ட ஆர்மிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.
பிக் பாஸ் என்பது ஒரு ரியாலிட்டி ஷோ தான் என்பது உள்ளே போகும் பிரபலங்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால், உள்ளே காட்டப்படுவதை வைத்து இனிமேலும் பொங்க கூடாது என்பதை ரசிகர்கள் எப்பொதுதான் புரிந்து கொள்வார்கள் என்பது தான் தெரியவில்லை.

சொதப்பல் சீசன்
பிக் பாஸ் வரலாற்றிலேயே இந்த சீசனில் தான் ஏகப்பட்ட பரிட்சையமில்லாத முகங்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதன் காரணமாக நிச்சயம் புதிய சுவாரஸ்யங்கள் இருக்கும் ஓவராக நடிப்பு இருக்காது என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த சீசன் முழுக்க டிராமா கம்பெனி சீரியல் போல நடைபெற்று வருவது கடுப்பை கிளப்பி இருக்கிறது.

சண்டையும் சமாதானமும்
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட்டால் அது தொடர்பான பஞ்சாயத்தை வார இறுதி நாட்களில் கமல் வந்து தீர்த்து வைத்து ஒழுங்காக விளையாட சொல்வார். ஆனால், இந்த சீசனில் சண்டை போட்டு சில தினங்களிலேயே சமாதானம் ஆகி விடுவதால் அடுத்த வாரத்திற்கான சண்டையை மூட்டி விடும் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார் கமல் என்கிற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஃபேக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ தான் என்றாலும், அந்த நிகழ்ச்சி சைக்கலாஜிக்கலாக சில விஷயங்களில் அணுகி வந்த நிலையில் தான் அது உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆனால், இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி டாஸ்க் கொடுப்பதில் இருந்து சண்டைகளை கொண்டு செல்லும் விதம் வரை ஏகப்பட்ட சொதப்பல்களுடன் நடைபெற்று வருவதால் இது ஃபேக் பாஸ் ஆகவே தெரிவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

முத்த மழை
தாமரை மற்றும் பிரியங்கா இனிமேல் ஒருவர் முகத்தில் ஒருவர் முழிக்க மாட்டோம் என்கிற ரீதியில் சண்டை போட்ட நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இருவரும் மாறி மாறி முத்த மழை பொழிந்தது ரசிகர்களை ரொம்பவே இரிடேட் ஆக்கி உள்ளது. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என ஏற்கனவே மீம்களை போட்டு பங்கம் பண்ணி வருகின்றனர் ரசிகர்கள்.

படுக்கையறையில் கட்டிப் புரண்டு
கிச்சன் ஏரியாவில் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தது போதாது என படுக்கையறையில் இருவரும் கட்டிப் புரண்டு சிரித்து மகிழ்ந்த காட்சிகளை எல்லாம் பிக் பாஸ் எடிட்டர் கட் செய்யாமல் இருவருக்காக தனி தனியாக சண்டை போட்டுக் கொண்டு ரெட் கார்டு கேட்டு கூச்சல் போட்ட ரசிகர்களை காண்டாக்கும் நோக்கில் அப்படியே போட்டுள்ளார்.

அந்த ஒரு வார்த்தை
புத்தாண்டை முன்னிட்டு பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களை பார்ட்டிக்கு தயாராக சொன்ன பிக் பாஸ் இந்த வீட்டில் யார் என்ன விஷயத்தை கற்றுக் கொண்டு செல்கின்றனர் என்கிற பேசும் டாஸ்க்கையும் கொடுத்தார். அதில், பேசிய தாமரை இதுதான் சாக்கு என நினைத்துக் கொண்டு பிரியங்கா சாகுற வரைக்கும் என்கூட பேசமாட்டார் என சொல்லி விட்டார் என ஒரே போடாக போட பிரியங்காவின் மனம் உருகி சமாதானம் ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











