Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பிக் பாஸ் தாமரை யாரோட பிரைவேட் பார்ட்டி பண்றாருன்னு பாருங்க.. ஒரே குத்தாட்டமும் கும்மாளமும் தான்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தாமரைச் செல்வி பிரைவேட் பார்ட்டி பாடலுக்கு நடனமாடிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார் தாமரைச் செல்வி.
நாடகக் கலைஞரான தாமரைச் செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெகுளித்தனமாகவும், கோபக்காரியாகவும் தனது இயல்பான குணத்தை வெளிப்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தார்.
சிறுமலையில்
சிறப்பான
கிராமம்
செட்...
விடுதலை
படத்தில்
வெற்றிமாறன்
செய்த
வேற
லெவல்
விஷயம்!

எதுவுமே தெரியாது
பிக் பாஸ் வீட்டில் விளையாடலாம் வரல, இங்க இருந்தா நல்லா இருக்கும்னு தான் வந்தேன் எனக் கூறிய தாமரைச் செல்வி பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களுக்கு செம டஃப் கொடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரியங்காவுக்கும் தாமரைக்கும் நடந்த அந்த தள்ளுமுள்ளு சண்டையை யாருமே மறக்க முடியாது. எதுவுமே தெரியாதுன்னு சொல்றீங்க, ஆனால், எல்லாத்தையும் பண்றீங்க என பிரியங்காவே தாமரைக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

பிக் பாஸ் அல்டிமேட்
பிக் பாஸ் சீசன் 5ல் இறுதி வாரத்திற்கு வரமுடியாமல் வெளியேறிய தாமரைச் செல்வி உடனடியாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பாலாஜி முருகதாஸ் உடன் நல்ல நட்பு கிடைத்த நிலையில், தாமரை செல்விக்கு ரசிகர்கள் ஆதரவும் அதிகரித்தன. ஆனால், இந்த முறையும் அவர் டைட்டிலுக்கு நெருங்க கூட முடியவில்லை.

பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2
பிக் பாஸ் விட்டே வரமாட்டேன் என ஒரே பிடிவாதமாக இருந்து வருகிறார் தாமரை. பிக் பாஸ் சீசன் 5, பிக் பாஸ் அல்டிமேட் என அந்த வீட்டிலேயே தங்கி விட்ட தாமரை தற்போது பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டான்ஸ் ஆடி வருகிறார். பிரியங்கா மற்றும் ராஜு ஜெயமோகன் ஆங்கராக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஏகப்பட்ட பிக் பாஸ் பிரபலங்கள் ஜோடி போட்டு ஆடி வருகின்றனர்.

பிரைவேட் பார்ட்டி
தாமரை செல்வி எந்தவொரு பிக் பாஸ் பிரபலத்தையும் தனக்கு ஜோடியாக சேர்த்துக் கொள்ளாமல் தனது கணவர் பார்த்தசாரதியையே ஜோடியாக மாற்றி அவருடன் டான்ஸ் ஆடி வருகிறார். சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இடம்பெற்ற்றுள்ள பிரைவேட் பார்ட்டி பாடலுக்கு சமீபத்தில் இருவரும் ரிஹர்சல் செய்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

கணவருடன் குத்தாட்டம்
தொடர்ச்சியாக கணவருடன் குத்தாட்டம் போடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு டிரெண்ட் செய்து வருகிறார் தாமரை. தாமரைக்கு சரி சமமாக அவரது கணவரும் டான்ஸ் ஆட கற்றுக் கொண்டாரே என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் லைக்குகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.