ரோபோ சங்கருக்கு ஜோடியாக நடிக்கிறாரா தாமரைச்செல்வி.. பிக் பாஸ் டு சினிமா வேறலெவல் என்ட்ரி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட தாமரைச்செல்வி சினிமாவில் நடித்து வருவதாக சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பல பிரபலங்கள் சினிமாவில் ஸ்டார் ஆகி வருகின்றனர்.

அந்த வரிசையில் தாமரைச்செல்வி ரோபோ சங்கர் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நாடகக் கலைஞர்

நாடகக் கலைஞர்

கிராமங்களில் நாடகங்களில் நடித்து வந்த தாமரைச்செல்வி பிக் பாஸ் போட்டியாளர் என்றதும் சின்னப் பொண்ணுவுடன் சேர்த்து இவரையும் சீக்கிரம் வெளியே அனுப்பிவிடுவார்கள் என பலரும் விமர்சித்தனர். ஆனால், ஒன்றுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு அவர் கேம் ஆடிய விதம் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு பிடித்துப் போனது.

பிக் பாஸ் வீட்டிலேயே டென்ட்

பிக் பாஸ் வீட்டிலேயே டென்ட்

பிக் பாஸ் சீசன் 5 முடிந்த உடனே அதிரடியாக ஆரம்பமான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தாமரைச்செல்வி போட்டியாளராக பங்கேற்று வேறலெவல் பர்ஃபார்மன்ஸை கொடுத்தார். அதுமட்டுமின்றி கணவருடன் சேர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து ஃபார்மேட்களிலும் வாய்ப்பு முடிந்து விட்ட நிலையில், அடுத்ததாக விஜய் டிவி சீரியலில் தாமரைச் செல்வி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அழகாக சினிமாவில் நடிக்க அவருக்கு சூப்பரான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரோபோ சங்கருக்கு ஜோடியா

ரோபோ சங்கருக்கு ஜோடியா

ரோபோ சங்கர் உடன் சினிமாவில் நடித்து வருவதாக தற்போது ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தாமரைச் செல்வி. ஒரு வழியாக சினிமாவில் நடிக்க உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதே என்றும் நிறைய படங்கள் பண்ணனும் அக்கா என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

சம்யுக்தா பிசி

சம்யுக்தா பிசி

பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்ற பிறகு சம்யுக்தாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன். மைடியர் பூதம் படத்தில் டீச்சராக நடித்திருந்த அவர், காபி வித் காதல் மற்றும் விஜய்யின் வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அவரை போலவே தாமரைச் செல்வியும் குணசித்திர கதாபாத்திரங்களில் பிசியாகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X