வில்லி சரியான வில்லி.. கொளுத்திப் போட்ட கமல்.. பிரியங்காவை பஞ்சர் பண்ண தாமரை செல்வி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தான் இந்த வாரம் கண்ணாடி டாஸ்க் கொடுத்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டையை உருவாக்கினார் என்றால், வார இறுதி நாளான சனிக்கிழமை எபிசோடில் கமல் சாரும் அதே வேலையை செய்துள்ளார்.

பிரியங்காவின் கண்ணாடியாக மாறி தாமரை அவரை பஞ்சர் பண்ணும் காட்சிகள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

வேறலெவல் டாஸ்க்

வேறலெவல் டாஸ்க்

பிக் பாஸ் தமிழ் 5 சீசனிலேயே இந்த வாரம் நடத்தப்பட்ட கண்ணாடி டாஸ்க் தான் உண்மையாகவே வேற லெவலில் இருந்ததாக பிக் பாஸ் ரசிகர்கள் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கமெண்ட் அடித்து வருகின்றனர். போட்டியாளர்களின் ஈகோவை டச் செய்யவும் அவர்களது உறுதியை வெளிப்படுத்தவும் இந்த டாஸ்க் பெரிதும் உதவியதாக கூறிவருகின்றனர்.

3வது புரமோ

3வது புரமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் அதே கண்ணாடி டாஸ்க்கை கமல் சாரும் நிகழ்த்தி பார்த்து சந்தோஷப்பட்டுள்ளார். பிரியங்காவின் நிழலாக தாமரை இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் எனக் கேட்டு அதையும் பார்த்து விடலாமே என நல்லாவே கொளுத்திப் போட்டார்.

எனக்கா கேம் ஆடத் தெரியாது

எனக்கா கேம் ஆடத் தெரியாது

இந்த வீட்டிலேயே புத்திசாலியான பெண் நீ தான் என்றும் தாமரைக்கு நல்லாவே கேம் ஆடத் தெரியும் என தொடர்ந்து அவருக்கு சப்போர்ட் செய்து வரும் பிரியங்காவை கண்ணாடி டாஸ்க்கில் சும்மா வச்சு செய்துள்ளார் தாமரை. கிராமத்தில் இருந்து வந்த தாமரைக்கு விளையாட தெரியாது என பலரும் அனுதாப ஓட்டுக்களை அள்ளி வீசி வரும் நிலையில், எனக்கா கேம் ஆடத் தெரியாது என்கிற ரீதியில் அவர் விளையாடி வரும் கேம் வேற லெவல்.

வில்லி சரியான வில்லி

வில்லி சரியான வில்லி

பிரியங்காவின் கண்ணாடியாக மாறி என் கிட்ட மட்டும் நீ அன்பையே காட்ட மாட்டேங்குற.. நிரூப், அபிஷேக்கிற்கெல்லாம் அன்பை கொட்டுற என அமைதியாக பாவனி மற்றும் அக்‌ஷரா மாறி பேசி வந்த தாமரை திடீரென தனது ஸ்டைலுக்கு மாறி வில்லி சரியான வில்லி நீ என பிரியங்காவை பார்த்து பேச பிரியங்கா அப்படியே ஸ்டன் ஆகி போய்விட்டார்.

இசையிடம் இப்படி பேசலயே

இசையிடம் இப்படி பேசலயே

இசைவாணி பற்றி என்ன பேசுவது என்றே தெரியாமல் பாட்டுப் பாடி அவரை வெறுப்பேற்றிய நிலையில், பிரியங்காவை மட்டும் தாமரை செல்வி இப்படி பஞ்சர் பண்ணும் அளவுக்கு பேசுகிறாரே என பிக் பாஸ் 3வது புரமோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X