ரம்யா கிருஷ்ணன் முன்பாக பிரியங்காவை பீஸு பீஸாக கிழித்து தொங்கவிட்ட தாமரை.. நல்லா பேசுறாங்க!
சென்னை: தலைவர் ஆக தகுதியில்லை என பிரியங்கா தன்னை பார்த்து சொன்னது சரியல்ல என்பதை ரம்யா கிருஷ்ணன் முன்பாகவே எடுத்து சத்தமாக பேசி அசத்தி உள்ளார் தாமரை செல்வி.
இந்த வாரம் தொடக்கத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே தான் அவ்வளவு பெரிய சண்டை நடந்தது.
ஆனால், முதல் நபராக பிரியங்காவை காப்பாற்றி விஜய் டிவி தனது கடமையை ஆற்றியது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை ராமசாமி
இந்த சீசன் வெள்ளிக்கிழமை ராமசாமியாகவே மாறிவிட்டார் தாமரை என வந்த உடனே ரம்யா கிருஷ்ணன் தனது கருத்தை தெளிவாக பதிவு செய்து விட்டார். வாரம் முழுக்க சண்டை போடும் தாமரை செல்வி வார இறுதியில் பொட்டிப் பாம்பாக அடங்கி விடுகிறார் என கூறியிருந்தார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த வாரம் முதல் இரு நாட்களை தவிர ஸ்கூல் டாஸ்க் வந்த உடனேயே தாமரை செல்வி சைலன்ட் ஆகிவிட்டார் என்பது தான் உண்மை.

தகுதியில்லை
தலைவராக தாமரை செல்விக்கு தகுதியில்லை என பிரியங்கா சொன்னதை தாமரை செல்வியும் ஏற்கவில்லை. பிக் பாஸ் ரசிகர்களும் ஏற்கவில்லை. பிக் பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களுக்கும் அந்த வீட்டை நிர்வகிக்க முழு தகுதி உள்ளது என்பது தான் மக்களுடைய நிலைப்பாடாக இருந்தது.

திடீர் மாற்றம்
பிரியங்காவின் அந்த பேச்சு அவருக்கான ஓட்டுக்களை மக்கள் மத்தியில் குறைக்க ஆரம்பித்த நிலையில், அதனை புரிந்து கொண்ட பிக் பாஸ் குழு பிரியங்காவை காப்பாற்ற இந்த வாரம் நாமினேஷனிலேயே இல்லாத அக்ஷரா மற்றும் சிபி சண்டையை அழகாக ஆரம்பித்து வாரம் முழுக்க நல்லா விளையாடிய ஐக்கி பெர்ரியை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன் பஞ்சாயத்து
வார இறுதியில் அந்த பிரச்சனையையும் கேட்காமல் விட்டு விட்டால் மக்கள் கடுப்பாகி விடுவார்கள் என மீண்டும் அந்த பஞ்சாயத்தை ரம்யா கிருஷ்ணன் கிளற எரிமலையாக வெடித்து சிதறி உள்ளார் தாமரை செல்வி. பிரியங்கா மறுமுனையில் ஏதோ உத்தரவு வந்தவரை போல ரொம்பவே சைலன்ட்டாக மாறி சாந்தமாக ரியாக்ஷன் கொடுப்பது எல்லாம் போலித்தனமாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நல்லா பேசுறாங்க
எப்படி தகுதி இல்லைன்னு அந்தப்புள்ள சொல்லலாம் என்கிற ரீதியில் பிரியங்காவை போட்டு பீஸு பீஸாக தாமரை செல்வி கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்க அந்த பக்கம் முதல் நபராக சேவ் ஆன சிக்னலை புரிந்து கொண்ட பிரியங்கா இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க தாமரை அக்கா நல்லா பேசுறாங்க மேடம் என சூப்பராக சமாளிக்கும் மூன்றாவது புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











