என் வீட்டுக்கு கேஸ் அடுப்பு வரப் போகுது.. தாமரைக்கு என்னவொரு சந்தோஷம்.. டைட்டிலும் கிடைச்சா?
சென்னை: பிக் பாஸ் வீடு நேற்று சர்வைவர் ஷோவாக இருந்த நிலையில், இன்று மாஸ்டர் செஃப் மோடுக்கு மாறியது.
ப்ரீத்தி கேஸ் அடுப்பு விளம்பரத்திற்காக பிக் பாஸ் ஹவுஸ்மேட்களுக்கு ஒரு போட்டி நடத்தப்பட்டது.
அந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு புத்தம் புதிய கேஸ் அடுப்பு பரிசாக அறிவிக்கப்பட்டதும் தாமரை செல்வி சந்தோஷத்தில் குதித்தார்.

பிக் பாஸ் வீட்டில் மாஸ்டர் செஃப்
கடந்த ஒரு வாரமாக பிக் பாஸ் வீட்டில் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்த நிலையில், தற்போது மாஸ்டர் செஃப் பக்கம் வண்டி திரும்பி இருக்கிறது. தாமரை ஒரு அணிக்கும் பாவனி ஒரு அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு சமையல் போட்டியில் கலந்து கொண்டனர்.

நடுவர் ராஜு
ராஜு, சஞ்சீவ் மற்றும் வருண் ஆகிய மூவரையும் நடுவர்களாக போட்டு உணவுகளை சுவை பார்த்து சில கண்டிஷன்களை யார் சரியாக கடைபிடித்தார்களோ அந்த அணியை வெற்றி அணியாக அறிவிக்க பிக் பாஸ் பணித்தார். அப்போதே தாமரை அணி தான் ஜெயிக்கும் என்பது உறுதியாகி விட்டது.

மட்டன் ஸ்பெஷல்
மட்டன் செய்வதில் தாமரை செல்வியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என ஏற்கனவே ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடும் சொல்லி உள்ள நிலையில், இந்த டாஸ்க்கிலும் மட்டன் ஐட்டத்தை எடுத்து வைத்து தாமரை ஸ்கோர் செய்ய வழி வகுத்து விட்டனர்.

கேஸ் அடுப்பு பரிசு
பாவனி சிறப்பாக சமைத்தாலும் அதிக வெரைட்டிகள் மற்றும் கிரியேட்டிவ் தாமரையின் அணியினருக்குத் தான் உள்ளது எனக் கூறி கடைசி நேரத்தில் தாமரை அணியினரை வின்னராக ராஜு, சஞ்சீவ் மற்றும் வருண் தேர்வு செய்து வெற்றி பெற வைத்து விட்டனர்.

சந்தோஷத்தில் தாமரை
இந்த போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ப்ரீத்தி சார்பாக புத்தம் புதிய கேஸ் ஸ்டவ் ஆளுக்கொன்று பரிசாக வழங்கப்படும் என அறிவித்ததுமே சந்தோஷத்தின் உச்சிக்கே சென்ற தாமரை செல்வி துள்ளி குதித்து விளையாட ஆரம்பித்தார்.

கேஸ் அடுப்பு இல்லையா
தாமரை செல்வி தனது வீட்டுக்கு கேஸ் அடுப்பு வரப் போகுது என்பதை அறிந்து கொண்டு சந்தோஷமாக கத்திய நிலையில், இதுவரை தாமரையின் வீட்டில் கேஸ் அடுப்பு கூடவா இல்லை. உண்மையாகவே தாமரை இப்படி சொல்கிறாரா? அல்லது ஓட்டுக்காக பேசுகிறாரா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











