அநியாயமா விளையாடுறதுக்கு பேரு நியாயமா… தாமரையால் ரணகளமாகும் பிக் பாஸ் வீடு !

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது பட்டிக்காடா பட்டணமா என்ற டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த டாஸ்கில் இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுபவர்கள் கிராமத்து மக்களா? நகரத்து மக்களா? என்ற தலைப்பில் பிக்பாஸ் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விவாதித்து வருகின்றனர்.

அதில், ஐக்கி பெர்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பதால் பிரியங்கா சக போட்டியாளர்களை பாசத்துடன் கட்டிப் பிடிப்பது சிலரை முகம் சுழிக்க வைக்கும் என்று வாதிட்டார் இதுவே வீட்டில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது.

கிராமத்து உணவே சிறந்தது

கிராமத்து உணவே சிறந்தது

பட்டிக்காடா பட்டணமா டாஸ்க் இன்றும் தொடங்கியது. இதில், மனதை வென்றது கிராமத்து உணவா... நகரத்து உணவா என்ற டாஸ்க் போட்டியாளர்கள் பேசினர். அதில், கிராமிய உணவே சிறந்த உணவே சிறந்தது என்று ராஜு பேசினார். இதையடுத்து சின்னப்பொண்ணு பழைய சோறு பச்சை மிளகாய் என்ற பாட்டுப்பாடி கிராமத்து உணவே சிறந்தது என்றார்.

நகரத்து அணி

நகரத்து அணி

இதையடுத்து நகரத்து அணியில் இருந்து பிரியங்கா பேசினார் அப்போது , நிரூப் பாஸ்தா செய்யும் போது பெண்கள் எல்லாம் எனக்கு, எனக்கு என்று கேட்டனர் என்றார். அவரை தொடர்ந்து பேசிய இமான் அண்ணாச்சி டூல்ஸ் உணவு சூப்பரான உணவு என்று பேசினார். இதையடுத்து கிராமத்து உணவே சிறந்தது என்று இசைவாணி தீர்ப்பளித்தார்.

நிரூப் சிறப்பாக விளையாடினார்

நிரூப் சிறப்பாக விளையாடினார்

ஊரு விட்டு ஊரு வந்து டாஸ்கில், பிக் பாஸ் நிகழ்ச்சியை உண்மையாக புரிந்து விளையாடுவது கிராமத்து மக்களா? நகரத்து மக்களா? என்று தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், பேசிய இமான் அண்ணாச்சி சாம்பாருக்கு தேவை பருப்பு... இந்த நிகழ்ச்சிக்கு தேவை நிரூப் என்று நிருப் சிறப்பாக விளையாடியதாக பேசினார்.

உங்ககிட்ட ஒண்ணும் இல்லை

உங்ககிட்ட ஒண்ணும் இல்லை

இதையடுத்து பேசிய பிரியங்கா, நகரம் தான் கெத்து என்றும் இதுவரை நடந்து முடிந்த டாஸ்க்கில் நகரத்து மக்களிடமே அனைத்து காயின்களும் இருக்கு என நடுவர் இசைவாணியையும் நகரத்து மக்கள் லிஸ்ட்டிலேயே சேர்த்து பிரியங்கா, உங்க கிட்ட ஒண்ணுமில்ல ஸ்வாகா என நாமம் போட்டு காட்டினார்.

நேரடியாக சண்டை

நேரடியாக சண்டை

இதனால், கோபம் தலைக்கு ஏறிய தாமரை செல்வி, யாரு பக்கம் நியாயம் ... அநியாயமா விளையாடுறதுக்கு பேரு நியாயம் கிடையாது என சுருதியை குற்றம் சாட்டி பேசினார். மேலும், கமல் சார் அதை பத்தி பேசற வரைக்கும் பேசக் கூடாதுனா தான் இருக்கேன் என சுருதியிடம் நேரடியாக சண்டைக்கு சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X