தம்பி இசை வெளியீட்டு விழா.. காலையிலேயே கதறி அழுத கார்த்தி.. ஏன் தெரியுமா?
Recommended Video
சென்னை: கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது.
தம்பி இசை வெளியீட்டுக்காக சென்னைக்கு புறப்பட்டு வரும் வழியில் கார்த்தி ரசிகர் மன்ற தலைவர் நித்யானந்த் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவரது உடலுக்கு காலையிலேயே அஞ்சலி செலுத்தி விட்டு வந்த நடிகர் கார்த்தி, தம்பி இசை வெளியீட்டு விழா துவங்கும் முன் அனைவரையும் ஒரு நிமிடம் அமைதியாக எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தும் படி கேட்டுக் கொண்டார்.
தம்பி இசை வெளியீடு
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் மற்றும் பழம்பெரும் நடிகை செளக்கார் ஜானகி நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்று வருகிறது.
சூர்யா, ஜோதிகா
தம்பி இசை வெளியீட்டு விழாவுக்கு அண்ணன் சூர்யா வராமல் இருப்பாரா, ஜோதிகாவுடன் வருகை தந்து தம்பி இசை வெளியீட்டு விழாவை சிறப்பித்துள்ளார். சூர்யாவின் வருகையை அடுத்து சூர்யா ரசிகர்கள் தம்பி இசை வெளியீட்டு விழா ஹேஷ்டேகை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
எனக்கும் கார்த்தி சாருக்கும் ஆகவே ஆகாது
சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் மகன் குட்டி ராசுவாக கலக்கிய மாஸ்டர் அஷ்வந்த், கார்த்தியின் தம்பி படத்திலும் நடித்துள்ளார். தம்பி இசை வெளியீட்டு விழாவில் பேசிய மாஸ்டர் அஷ்வந்த், ரன்வீர் சிங் மற்றும் விஜய்சேதுபதிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும், எனக்கும் கார்த்தி சாருக்கும் ஆகவே ஆகாது என ஷூட்டிங் ஸ்பாட் நினைவுகளை ஜாலியாக பகிர்ந்து கொண்டார்.
எனக்கு ரொம்ப புடிச்ச ஜோடி
தம்பி இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஆன்சன் பால், எனது பள்ளி பருவத்தில் காக்க காக்க படத்தை தேவி தியேட்டரில் பார்த்தேன். அப்போது தான் என்னுடைய முதல் காதலையும் சந்தித்தேன். ஆனால், அந்த காதல் புட்டுக்குச்சு, அது வேற விஷயம் என கலகலப்பாக பேசிய மலையாள நடிகர் ஆன்சன் பால், தனக்கு ரொம்ப புடிச்ச ஜோடி சூர்யா, ஜோதிகா தான் என்றார்.
மெளன அஞ்சலி
தம்பி இசை வெளியீட்டுக்காக சென்னைக்கு புறப்பட்டு வந்த கார்த்தி ரசிகர் மன்ற தலைவர் நித்யானந்த் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தம்பி இசை வெளியீட்டு விழா துவங்கும் முன் அனைவரையும் ஒரு நிமிடம் அமைதியாக எழுந்து நின்று அவருக்காக மெளன அஞ்சலி செலுத்தும் படி நடிகர் கார்த்தி கேட்டுக் கொண்டார்.
கண்ணீர் விட்டு அழுத கார்த்தி
கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா நேற்று இரவு உளுந்தூர் பேட்டை நடந்த சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு இன்று அதிகாலை கார்த்தி அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.


Click it and Unblock the Notifications











