‘தம்பி’ யை அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.. ஜீத்து ஜோசப்
சென்னை: கார்த்தி, ஜோதிகா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள தம்பி படம் டிசம்பர் 20ல் வெளியாக உள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கி உள்ள இப்படம், தமிழ், தெலுங்கு,ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
வயாகம் 18 ஸ்டியோஸ் மற்றும் பேரலஸ் மைண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில், ஜோதிகா, கார்த்திக்கிற்கு அக்காவாக நடித்துள்ளார். 2 குடும்பங்களின் உறவுகளுக்கு இடையே நடக்கும் கதை தான் இந்த 'தம்பி'.

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது. இப்படம் குறித்து இயக்குனர் ஜீத்து ஜோசப் சில சுவாரசியத் தகவலை தெரிவித்துள்ளார். இப்படம், இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் உறவுகள் குறித்ததாகும். அன்பு தான் எல்லாத்தையும் மாத்தும் என்பதற்கு இந்த படம் ஒரு எடுக்காட்டாக இருக்கும் என்று கூறினார்.
அக்கா, தம்பி உறவை மையப்படுத்தி இக்கதை அமைந்து இருப்பதால் இது வெறும் குடும்ப சென்டிமென்ட் படம் இல்லை. இப்படத்தில் எதிர்பாராதது நடக்கும், படம் முழுக்க ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் என்பதால், கதைக்கு என்ன தேவையோ அதை தேடித் தேடி செய்திருக்கிறோம்.

கார்த்தி திறமையான நடிகர். தன்னுடைய கதாபாத்திரம் என்னவென்பதைப் புரிந்துகொண்டு கடின முயற்சி எடுத்து சண்டைகாட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள் என எல்லாவற்றிலும் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும், ஜோதிகாவின் திறமையை பற்றி நாம சொல்லவே வேண்டாம் அனுபவமிக்க நடிகை எனபதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அவருடைய நடிப்பு பாணியும், கதாபாத்திரத்தைக் கையாளும் விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்திலும் சிறப்பான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அயராது உழைத்திருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்தியராஜ் வழக்கமான அப்பாவாக இல்லாமல், கதாபாத்திரத்தின் தேவையை உணர்ந்து நடித்துள்ளார்.

நான் பரிபூரணமாக இப்படத்தை இயக்கி இருக்கிறேனா என்பது எனக்கு தெரியாது. ஆனால், திரில்லர் கதை என்பதால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக எழுதி, நன்றாக படித்துவிட்டுதான் இயக்கியிருக்கிறேன். இப்படம் டிசம்பர் 20ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை கண்டிப்பா திரையரங்கிற்கு வந்து அனைவரும் பாருங்கள், நல்ல பொழுதுபோக்கான குடும்ப படமாக, சஸ்பென்ஸ் நிறைந்ததா இருக்கும் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். படம் பார்த்துவிட்டு திரும்பும்போது சந்தோஷமாக மன நிறைவு இருக்கும் என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறினார்.

ஆன்சன் பால், நிகிலா விமல், அம்மு, அபிராமி, இளவரசு, சவுகார் ஜானகி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் இப்படம் டாங்கா என்ற பெயரில் வெளிவருகிறது இதில் மோகன்லால் நடிக்கிறார். தெலுங்கில் நாகார்ஜுன் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











