நானும் வடிவேலுவும் இணைஞ்சா பழைய ஜோக்கை எல்லாம் பீட் பண்ணிடுவோம்! - தம்பி ராமையா

By Shankar

வடிவேலுவும் தம்பி ராமையாவும் ஒரு காலத்தில் 'அப்படி' இருந்தவர்கள். வடிவேலுவுக்காக காமெடி ட்ராக் எழுதிக் கொண்டும், அவ்வப்போது அவருடன் நடித்துக் கொண்டும் இருந்த ராமையா, அவரை வைத்து இந்திலோகரத்தில் அழகப்பன் என்ற படத்தையும் எடுத்தார். படம் படு ப்ளாப். ஆனாலும் இணைந்து நடித்து வந்தனர்.

இடையில் வடிவேலு கொஞ்சம் ஒதுங்கி நிற்க, அந்த இடைவெளியில் தம்பி ராமையாவின் கொடி பறக்க ஆரம்பித்தது.

Thambi Ramaiya talks about Vadivelu

இன்றைக்கு கோடம்பாக்கத்தில் மிக அதிகம் தேவைப்படும் நடிகர் தம்பி ராமையாதான். கணக்கு சொல்ல முடியாத அளவுக்கு படங்கள். சில படங்களில் ஹீரோ ரேஞ்சுக்கு வருகிறார்.

வடிவேலு தன் அஞ்ஞாதவாசத்தை முடித்துக் கொண்டு மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ஆனால் நடித்தால் இனி ஹீரோதான் என்று முடிவு செய்துவிட்டார். அவரது தெனாலிராமன் படத்தில் தம்பி ராமையா நடிக்கவில்லை.

இனி நடிக்க வாய்ப்பிருக்கிறதா.. இருவருக்கும் ஏதும் சண்டையா என்ற கேள்விக்கு தம்பி ராமையா இப்படி பதிலளித்துள்ளார்:

''நாங்க என்ன கட்டி உருண்டு சண்டையா போட்டுக்கிட்டோம். அவரும் நடிக்கிறார்; நானும் நடிக்கிறேன். வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. சேர்ந்து நடிக்க வாய்ப்பு வரலை. பார்த்துப் பேசிக்க முடியலை.

ஆனா ஒண்ணு, நாங்க திரும்பவும் சேர்ந்து நடிச்சா, நாங்க ஹிட் கொடுத்த பழைய ஜோக்கை எல்லாம் பீட் பண்ணிப் போய்ட்டே இருப்போம்!''

ரைட்டு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X