ஜாலியா ஃபேமிலியோட போய் படம் பார்க்கலாம்.. தம்பி ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: கைதி படத்திற்கு பிறகு இந்த ஆண்டு கார்த்தியின் நடிப்பில் மற்றொரு படமாக தம்பி இன்று வெளியாகியுள்ளது.
த்ரிஷ்யம், பாபநாசம் படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், செளக்கார் ஜானகி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படம் திரையரங்கில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது.
தம்பி படத்தின் ட்விட்டர் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
செம்ம ட்விஸ்ட்
ஆக்ஷன் த்ரில்லர் படங்கள் நிறைய வெளியாகியுள்ள நிலையில், முதன்முறையாக காமெடி த்ரில்லர் படத்தை கையாண்டுள்ளார் இயக்குநர் ஜீத்து ஜோசப். படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் வரும் செம்ம ட்விஸ்ட் படத்தை ரசிக்க வைப்பதாக இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.
பாசிட்டிவ் விமர்சனம்
எதிர்த்துக் களம் இறங்கியவர்கள் மற்றும் இதற்கு முன்பு எதிராக களம் இறங்கியவர்கள் இடமிருந்து கூட நல்ல பாசிட்டிவ் கருத்து வருகிறது என கார்த்தி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை லீவுக்கு குடும்பத்துடன் பார்க்க வேண்டிய குடும்ப திரைப்படம் எமோசன் சீன் எல்லாம் அருமை. கார்த்தி மற்றும் ஜோதிகா அண்ணி நடிப்பு எல்லாம் அட்டகாசம். ஜித்து ஜோசப் இயக்கம், எதிர்பாராத திருப்பங்கள் படத்தில் என படம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வந்துள்ளது என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.
ஜோதிகா வாய்ஸ் மோசம்
தோழா படத்தில் பார்த்த கார்த்தியை இந்த படத்திலும் பார்க்கலாம். ஆனால், ஜோதிகாவின் ஸ்டோன் ஃபேஸ் நடிப்பு மற்றும் அவரது வாய்ஸ் மோசம் என ட்விட்டரில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சூப்பர் ஃபேமிலி டிராமா
தம்பி படத்தின் முதல் பாகம் என்கேஜிங்காகவும் நன்றாகவும் உள்ளதாகவும், குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் சூப்பர் ஃபேமிலி டிராமாவாக தம்பி வந்துள்ளது என ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதுமட்டும் தான் நெகட்டிவ்
தம்பி படத்தில் முதல் பாகம் மிகவும் பொறுமையாக போவது தான் படத்தின் பலவீனம் மற்றும் நெகட்டிவ் விஷயம் என பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இரண்டாம் பாதி அருமையாகவும், கடைசி 20 நிமிடங்கள் வரும் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் பாபநாசத்தை பீட் செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











