ரஜினிக்காக லீவு போடச் சொன்ன தனுஷ் எங்க, சிவாவுக்காக லீவு போடுறேன்னு சொல்லும் ஃபேன்ஸ் எங்க
Recommended Video

சென்னை: தலைப்பை பார்த்தவுடன் ரஜினியை கலாய்ப்பதாக நினைத்து கோபப்பட வேண்டாம். தமிழ் படம் 2.0 டீஸர் பார்த்த அதே மூடில் ஜாலியாக எழுதப்பட்டது. தவறாக நினைத்தால் கம்பெனி பொறுப்பாகாது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள தமிழ் படம் 2.0-ன் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
படத்தில் யாரையும் விட்டு வைக்காமல் மரண பங்கம் செய்துள்ளார் அமுதன்.
லீவு
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தை பார்க்க லீவு போட தயாராகுமாறு தனுஷ் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
சிவா
தமிழ் படம் 2.0 டீஸரை பார்த்தவர்கள் படம் எப்பொழுது ரிலீஸாகும், லீவு போட ரெடி என்று தெரிவித்துள்ளனர்.
கிண்டல்
தமிழ் படம் 2.0 டீஸரை பார்த்து பார்த்து சிரித்து வயிறு தான் வலிக்கிறது.
பேச்சு
சமூக வலைதளம் முழுவதும் தமிழ் படம் 2.0 டீஸர் பற்றி தான் பேச்சாக கிடக்கிறது. வச்சு செஞ்சிட்டாங்கள்ள


Click it and Unblock the Notifications











