ஓ.பி.எஸ்.ஸை விடுங்க இந்த சிவாவும், அமுதனும் யாரை கலாய்ச்சிருக்காங்கன்னு பாருங்க

By Siva

Recommended Video

அதிபர் டிரம்பையும் கிண்டல் செய்த சிவா- வீடியோ

சென்னை: தமிழ் படம் 2.0-ல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும் கிண்டல் செய்தது தெரிய வந்துள்ளது.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்த தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் தமிழ் படம் 2.0 என்ற பெயரில் தயாராகியுள்ளது.

படத்தின் தலைப்பிலேயே ரஜினியின் 2.0 பெயரை கிண்டல் செய்துள்ளனர்.

கலாய்

கலாய்

தமிழ் படம் 2.0-ன் டீஸர் அண்மையில் வெளியாகி வைரலானது. படத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். முதல் பலரையும் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்துள்ளனர்.

மெர்கல்

கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கை கட்டி சேரில் அமர்ந்திருக்க ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் மேஜையின் மீது இரு கைகளை வைத்து அவரை பார்க்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. அதையும் விட்டு வைக்கவில்லை இந்த அமுதன்.

சிவா

டிரம்ப், மெர்கல் புகைப்படம் போன்றே சிவா, தமிழ் படம் 2.0 குழு இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது எதேச்சையாக நடந்ததாக சிவா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வியப்பு

சிவாவின் ட்வீட்டை பார்த்த இயக்குனர் அமுதன் இதை நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். நம்பிட்டோம் அமுதன்.

காட்சிகள்

புதுப் படம், ட்ரெய்லர், டீஸரை பார்த்து அமுதன் தற்போது இப்படி தான் செய்கிறார் என்று கூறி ஒருவர் மீம்ஸ் போட்டார். அதை பார்த்த அமுதனோ நான் பாட்டுக்கு என் போஸ்ட் புரொடக்ஷன் வேலையை பாத்துக்கிட்டிருக்கிறேன் என்றார். சிவாவின் புதிய புகைப்படத்தை பார்த்தால் நீங்கள் போஸ்ட் புரொடக்ஷன் வேலை பார்க்கிற மாதிரி இல்லையே பாஸ்.

More from Filmibeat

Read more about: shiva சிவா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X