வெளியானது தமிழ் படம் 2.0 டீஸர்: அஜித், விஜய், விஷால், உயர்திரு 'ஸ்'ஸை மரண கலாய்
Recommended Video

சென்னை: தமிழ் படம் 2.0 படத்தின் டீஸரை பார்த்தாலே உடனே படத்தை பார்க்கும் ஆர்வம் ஏற்படுகிறது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2.0. 2010ம் ஆண்டு வெளியான தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் தான்.
தலைப்பில் 2.0 என்று வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாக தலைப்பை கலாய்த்துள்ளனர்.

கலாய்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவா வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். போஸ்டரை பார்த்ததுமே யாரை கிண்டல் செய்துள்ளார்கள் என்பது சூப்பராக புரிந்துவிட்டது.
டீஸர்
தமிழ் படம் 2.0-ன் ஒரு நிமிட டீஸர் இன்று வெளியாகியுள்ளது. சிவாவாகிய நான் என்று சிவா பதவியேற்கும் அதுவும் அழுது கொண்டு வெள்ளை நிற கைக்குட்டையால் கண்ணீரை துடைக்கும் காட்சியுடன் டீஸர் துவங்குகிறது. கைக்குட்டையை பார்த்த உடனே யாரை கலாய்க்கிறீர்கள் என்று தெரிந்துவிட்டது சிவா.

விவேகம்
துப்பறிவாளன் விஷால் மற்றும் அஜித்தின் விவேகம் படத்தையும் ஜாலியாக கலாய்த்துள்ளனர். அஜித்தின் மங்காத்தா, விஜய் படத்தை கூட கலாய்த்துள்ளனர்.

ரிலீஸ்
மே 25ம் தேதி ரிலீஸாக வேண்டிய தமிழ் படம் 2.0 ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. அப்படி என்றால் ரஜினி தூத்துக்குடி சென்ற காட்சியை சேர்த்துவிட்டு ரிலீஸ் பண்ணுவார்களோ?. டீஸரை பார்த்தாலே படத்தை உடனே பார்க்க வேண்டும் போல் உள்ளது.


Click it and Unblock the Notifications











