twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உதவி இயக்குநர்களுக்கு 5 ரூபாய்க்கு டீ காபி வழங்கும் தமிழ் ஸ்டுடியோ

    |

    சென்னை: சினிமா துறையில் சிரமப்படும் உதவி இயக்குநர்களுக்கும், தொழில் நட்பக் கலைஞர்களுக்கும் உதவிடும் வகையில் அவர்களுக்கு மலிவு விலையில் டீ, காபி போன்றவற்றை 5 ரூபாய் விலையில் வழங்க தமிழ் ஸ்டுடியோ முடிவு செய்துள்ளது.

    நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தினமும் குறைந்த பட்சம் 5 முதல் 10 டீ அல்லது காபி குடிக்காவிட்டால் பைத்தியமே பிடித்து விடும். இன்னும் சிலருக்கு டீ, காபி குடித்தால் தான் காலைக் கடன் வேலையே நடக்கும். மூளையும் சுறுசுறுப்பாக வேலை செய்யும். இல்லாவிட்டால் எதையோ பறிகொடுத்தது மாதிரியே தான் நடந்து கொள்வார்கள். அதிலும் எப்போதும் பரபரப்பாக வேலை நடக்கும் படப்பிடிப்பு தளங்களில் என்றால் கேட்கவே வேண்டாம்.

    Thamizh studio decides to offer Tea Coffee at affordable prices for Assistant Directors

    சென்னையில் கோடம்பாக்கம் மற்றும் வடபழனி ஆகிய இடங்களில் உள்ள ஸ்டுடியோக்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் நாள்தோறும் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்த படப்பிடிப்புகளில் பங்கேற்கும் பெரும்பாலான உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பெரும்பாலும் தங்களின் சாப்பாட்டுத் தேவையை படப்பிடிப்புத் தளத்திலேயே பூர்த்திசெய்து கொள்வதுண்டு.

    அதே போல், டீ, காபி போன்றவற்றுக்கு அருகிலுள்ள டீ கடைகளையே நாடிவருகின்றனர். ஆனால் அங்குள்ள டீ கடைகளில் டீ, காபி ஆகியவற்றின் விலை குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையில் உள்ளது. இதனால் பெரும்பாலான உதவி இயக்குநர்களும் தொழில்நட்பக் கலைஞர்களும் டீ, காபி குடிப்பதையே தவிர்த்து விடுவதுண்டு. இவர்களின் கஷ்டத்தை புரிந்துகொண்ட சில நல்ல உள்ளங்கள் இவர்களுக்கு உதவ தமிழ் ஸ்டுடியோ முன்வந்துள்ளன.

    நண்பர்களே உதவி இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மிக குறைந்த விலையில் மூன்று வேலையும் உணவு வழங்க வேண்டும் என்பது தமிழ் ஸ்டுடியோவின் முக்கியமான செயல் திட்டங்களில் ஒன்று. ஆனால் அதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படும் என்பதால், அந்த திட்டம் இன்னும் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும் படிப்படியாக அதனை செயல்படுத்த தமிழ் ஸ்டுடியோ முடிவெடுத்துள்ளது.

    முதல் கட்டமாக வடபழனியில் உள்ள விதை இயற்கை அங்காடியில் தற்போது கருப்பட்டி காபி, நாட்டு சர்க்கரை தேநீர், பாலில்லாத கடுங்காப்பி, கட்டன்சாயா, சுக்கு கருப்பட்டி காபி, சுக்கு மல்லி காபி, லெமன் டீ உள்ளிட்ட காபி மற்றும் தேநீர் வகைகளை 5 ரூபாய் விலையில் வழங்க முடிவு செய்துள்ளது தமிழ் ஸ்டுடியோ.

    இந்த சலுகை உதவி இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மட்டுமே. வடபழனியில் உள்ள பியூர் சினிமா அலுவலகத்தில் உதவி இயக்குனர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பதிவு செய்துக்கொண்டால் ஒரு அட்டை (Card) கொடுப்பார்கள். அதனை வடபழனியில் உள்ள விதை இயற்கை அங்காடியில் கொடுத்து சலுகை விலையில் காஃபி மற்றும் தேநீரை பெற்றுக்கொள்ளலாம்.

    சலுகை அட்டையை கீழ்கண்ட முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்

    பியூர் சினிமா புத்தக அங்காடி,
    எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு,
    வடபழனி. வாசன் ஐ கேர் அருகில்,
    விக்ரம் ஸ்டுடியோ எதிரில்,
    டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடி.

    காஃபி மற்றும் தேநீர் பெற:
    விதை இயற்கை அங்காடி,
    19, 1st மெயின் ரோட்,
    வெங்கீஷ்வரர் நகர்,
    வடபழனி சன்னதி தெரு எதிரில்,
    வடபழனி மெட்ரிகுலேசன் பள்ளி அருகில்.

    Read more about: tea
    English summary
    Tamizh Studio has decided to offer tea and coffee at affordable prices to help them with their daily work and help directors and professional artists.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X