சிம்பு ரசிகர்களுக்கு செம நியூஸ்.. ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. தமிழன் பாட்டு நாளை ரிலீஸ்!
சென்னை: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது.
2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி சிம்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.
இந்நிலையில், நாளை ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'தமிழன் பாட்டு' ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் செம ஸ்பீடில் உருவாகி உள்ள ஈஸ்வரன் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. கழுத்தில் பாம்புடன் செம ஒல்லியாக போஸ் கொடுத்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வைரலாக்கிய சிம்பு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரம்ம முகூர்த்தத்தில் ஈஸ்வரன் டீஸர் வெளியானது.

பாம்பு பிரச்சனை
ஈஸ்வரன் படத்தில் சிம்பு நிஜ பாம்பை பிடிப்பது போல வெளியான வீடியோ சர்ச்சையை கிளப்பியது. என்னடா சர்ச்சையே இல்லாமல் சிம்பு படம் வெளியாகப் போகிறதா என நினைத்த நிலையில், பாம்பு பிரச்சனை விஸ்வரூப படம் எடுத்தது. பின்னர், அது பிளாஸ்டிக் பாம்பு, கிராபிக்ஸ் பண்ணித்தான் அந்த காட்சிகளை எடுத்துள்ளோம் என படக்குழு விளக்கம் கொடுத்தது.
தமிழன் பாட்டு
வரும் பொங்கலுக்கு ஈஸ்வரன் படம் வெளியாகவுள்ள நிலையில், நாளை ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "தமிழன் பாட்டு" வெளியாகவுள்ளது. காலை 10:08 மணிக்கு இசைப் பாடலும் மாலை 4:50 மணிக்கு லிரிக் வீடியோவும் வெளியாக உள்ளது என்கிற அறிவிப்பை நடிகர் சிம்பு தற்போது வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
"நீங்கள் விடுற ஒரு ஒரு புகைப்படமும் உங்க உழைப்புக்கு அடையாளம் தலைவா.... ஈஸ்வரன் வரார்... ருத்ர தாண்டவம் கூட சிலம்பாட்டம் ஆடுவதை பார்க்க காத்துகொண்டு உள்ளோம்.. என சிம்பு ரசிகர்கள் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு வெயிட் பண்ணி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











