»   »  டின்னருக்கு கூப்பிட்ட தமன்னா; மறுத்து எஸ்கேப்பான நாக சைதன்யா - இது டோலிவுட் ஹாட் டாக் இப்போ!

டின்னருக்கு கூப்பிட்ட தமன்னா; மறுத்து எஸ்கேப்பான நாக சைதன்யா - இது டோலிவுட் ஹாட் டாக் இப்போ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட் குல்பி ஐஸான தமன்னா டின்னர் பார்ட்டிக்கு கூப்பிட்டு ஒரு நடிகர் மறுத்துவிட்டார் என்ற விஷயம்தான் சினிமா உலகில் இப்போதைய ஹாட் டாபிக்.

தமிழ் சினிமாவில் எண்ட்ரி ஆகி தெலுங்கு, இந்தி பட உலகிலும் ரவுண்ட் வரும் நடிகை தமன்னாவின் காதல் பற்றி ஏற்கனவே கிசுகிசுக்கள் உலாவி வருகின்றன.

தமிழ் நடிகர் ஒருவருடன் தாறுமாறாக இணைத்து பேசப்பட்டதால் மனமுடைந்த தமன்னா ஒரு வருடத்திற்கு மேல் தமிழ் சினிமா உலகம் பக்கமே தலை வைக்காமல் இருந்தார்.

அங்கும் கிசுகிசு

அங்கும் கிசுகிசு

தெலுங்கு பக்கம் பிசியாக இருந்தவருக்கு அங்கும் சிக்கல். பிரபாஸுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் அதனை தமன்னாவும், பிரபாஸும் மறுத்தனர்.

இன்னொரு ஹீரோ:

இன்னொரு ஹீரோ:

இந்நிலையில் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவுடன் "100 பெர்செண்டேஜ் லவ்" உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தார் தமன்னா.

விருந்துக்கு வர மறுத்த சைதன்யா:

விருந்துக்கு வர மறுத்த சைதன்யா:

அவரை தமன்னா இரவு விருந்துக்கு அழைத்ததாகவும், அதற்கு சைதன்யா மறுத்ததாகவும் இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

மேலும், மறுபடி மதிய விருந்திற்காவது வர வேண்டும் என்று கூறிய போது அதற்கும் மறுத்துவிட்டாராம் சைதன்யா.

சுற்றிச் சுழலும் கிசுகிசுக்கள்:

சுற்றிச் சுழலும் கிசுகிசுக்கள்:

இதனையடுத்து பாகுபலி 2 படபடப்பில் தீவிரமாக இருக்கும் தமன்னாவை சுற்றி மீண்டும் கிசுகிசுக்கள் சுற்றி வர ஆரம்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress thamanna invited Naga Chaitanya for dinner and party and he refused.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil