வந்துட்டான்யா 'தண்டல்காரன்' வந்துட்டான்யா: அய்யோ, இந்த நேரம் பார்த்து தேர்தல் நடக்குதே!
Recommended Video

சென்னை: என்.ஜி.கே. படத்தில் வரும் தண்டல்காரன் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே. படம் வரும் மே மாதம் 31ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தண்டல்காரன் பாடல் வீடியோ இன்று வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள்.
அறிவித்தபடி பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளனர்.
சூர்யா
தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான் என்று துவங்கும் அந்த பாடலின் லிரிக்கல் வீடியோவை சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நாடு
நாட்டாமையின் கையில் நாடே கெட்டுப் போச்சு, ஆதார் அட்டை இல்லாம ஆட்சி செய்ய வந்துட்டானே ஆகிய வரிகளுக்கு இலவச விளம்பரம் கிடைக்கும் ஆனால் கிடைக்காது. தேர்தல் நேரம் என்பதால் இலவச விளம்பரத்திற்கு வாய்ப்பில்லை ராஜா.
வேற லெவல்
தண்டல்காரன் பாடல் வேற லெவல், மீண்டும் மீண்டும் கேட்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள். அப்டேட் கேட்டு ஏங்கியவர்களுக்கு இந்த பாடல் வீடியோ பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
ரசிகர்கள்
தண்டல்காரன் பாடல் சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அந்த வீடியோவை புதிய சாதனை படைக்க வைக்காமல் ஓய மாட்டார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











