Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
"தங்கமகன்" தனுஷ்... "யூ"... குடும்பத்துடன் பார்க்கலாம்!
சென்னை: நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்க மகன் திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ சான்றிதழ் அளித்துள்ளனர்.
தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தங்கமகன். வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
#thangamagan censored with clean "U" .. December 18 release
— Dhanush (@dhanushkraja) December 11, 2015
வருகின்ற 18ம் தேதி இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய வகையில் யூ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.
வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் 2 வது பாகமாக உருவாகி இருக்கும் இப்படம் தந்தை - மகன் உறவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
2 மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்தில் தனுஷின் காதலியாக எமி ஜாக்சனும் மனைவியாக சமந்தாவும் நடித்திருக்கின்றனர். (இவர்கள் இருவரும் இதே போல விஜய்யுடன் இணைந்து தெறி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது)
இன்னும் 4 தினங்களில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்ததால் படக்குழுவினர் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.