Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கமகன் டிரெய்லர் ரிலீஸ் !
சென்னை: தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கமகன் டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.
தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தங்கமகன். கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் 2 வது பாகமாக தங்கமகன் உருவாகி இருக்கிறது.
இப்படத்தை வருகின்ற 18ம் தேதி படக்குழுவினர் வெளியிடுகின்றனர். மேலும் இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது.
மழை, வெள்ளம் காரணமாக நிறையப் படங்கள் தள்ளிப்போன நிலையில் சொன்ன தேதியில் தமிழ், தெலுங்கு மொழிகளில் படத்தை வெளியிடுகிறார் தனுஷ்.
Resuming work from Tom. #thangamagan trailer from Tom evening 6 pm
— Dhanush (@dhanushkraja) December 9, 2015
தெலுங்கில் இப்படம் 'நவ மன்மதடு' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு சுமார் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் இப்படத்தை 400 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகின்றனர்.
வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தங்கமகன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தங்கமகனில் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் தனுஷும், ஆரண்யாவாக நடிகை சமந்தாவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.