தங்க மீன்கள் படத்தில் வந்த குட்டி பெண் செல்லம்மா... இப்போ எப்படி வளந்துட்டானு பாருங்க!

சென்னை: இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான தங்க மீன்கள் படத்தில் ராமின் மகள் கதாபாத்திரத்தில் நடித்த அந்த குட்டிப் பெண் இப்போது வளர்ந்து கதாநாயகி போல இருக்கிறார்.

இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய இயக்குநர் ராம் நடிகர் ஜீவா மற்றும் அஞ்சலியை வைத்து கற்றது தமிழ் என்ற வித்தியாசமான படத்தை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறிவிட்டார்.

thanga meengal movie child artist sadhana latest photos

கற்றது தமிழ் படத்தைத் தொடர்ந்து, அப்பா மகள் பாசத்தை சொல்லும் தங்கமீன்கள் என்ற படத்தை இயக்கினார். மீன் குஞ்சுகளிடையே தன் மகளை தங்க மீனாக வளர்க்க ஆசைப்படும் தந்தையின் பாசம் பற்றிய கதை அம்சம் கொண்ட கதை, பல அப்பாக்களுக்கு பிடித்துப் போக படம் வெற்றி பெற்றது.

தங்கமீன்: நிலையான வேலையும், நிரந்தர வருமானமும் இல்லாத ராம், தன் மகளை தேவதையாக வளர்க்க ஆசைப்படுகிறார். மகளுக்கு ஃபீஸ் கட்டக்கூட வக்கில்லையே என்று வீட்டில் ராமுக்கு மரியாதை இல்லாமல் தவிக்கிறார். கல்விக் கட்டணங்கள், ஓர் ஏழைக் குடும்பத்தை எப்படி அலைக்கழிக்கும் என்ற கதையை கையில் எடுத்து, அதில், அப்பா-மகள் பாசத்தை முதல் புள்ளியாக வைத்து கதையை அழகாக சொல்லி இருப்பார் இயக்குநர்.

குட்டி தேவதை: இந்த படத்தில் செல்லமாவாக நடித்த சாதனா காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுனு காக்கா வந்து உங்ககிட்ட சொல்லுச்சா மிஸ் என்று பள்ளிக்கூடத்தில் கேட்பதும், தன்னை எவிட்டாவாகப் பாவித்து, அவ தங்க மீனாகிடுவா என்று தோழியிடம் கதை சொல்லும் போதும் குட்டி தேவதையாக மனதில் பதிந்து விட்டாள் சாதனா. இந்த படத்திற்கு இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்பதற்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்த படத்தில் இடம் பெற்ற ஆனந்த யாழை பாடல் பலரின் பேவரைட்டாக மாறி, பலரின் பிளே லிஸ்ட்டில் உள்ளது.

குட்டி பெண் செல்லம்மாவா இது: தங்கமீன்கள் படத்திற்கு பின் ராம் இயக்கிய பேரன்பு படத்திலும் சாதனா முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திலும் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்தைத் தொடர்ந்து ஒரு சில மலையாளப்படங்களில் நடித்த அந்த குட்டி தேவதை, தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக உள்ளார். மீடியா சார்ந்த கல்லூரி படிப்பை முடித்துள்ள சாதனா, பரதநாட்டியட்டிலும் கை தேர்ந்தவராக உள்ளார். இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாதனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் பரதநாட்டிய வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் குட்டி பெண் செல்லம்மாவா இது என்று கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X