தங்க மீன்கள்... இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம்!

By Shankar

சென்னை: கோவாவில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவுக்கு தேர்வாகியுள்ளது ராம் இயக்கிய தங்க மீன்கள்.

'கற்றது தமிழ்' படம் மூலம் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனராகத் திகழும் ராம், சமீபத்தில் நடித்து, இயக்கி வெளிவந்த படம் 'தங்க மீன்கள்'. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

விமர்சனங்கள் இருந்தாலும், ராமின் மாறுபட்ட முயற்சிக்காக பாராட்டுகளும், நல்ல வசூலும் கிடைத்தது.

இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படங்களில் ஒரே ஒரு தமிழ்ப் படம் 'தங்க மீன்கள்' என்பது குறிப்பிடத்தக்கது.

Thanga Meengal selected for Indian Panorama

மேலும், 18-வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் 'தங்க மீன்கள்' படத்தை 'குழந்தைகள் உலகம்' என்ற பிரிவில் மற்ற உலகப் படங்களோடு திரையிடத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் 'தங்க மீன்கள்' படம் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டத்தில் இயக்குனர் ராம், வெளியீட்டாளர் ஜே.சதிஷ்குமார் மற்றும் இந்தப் படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளரான கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X