தங்கமீனுக்கு ‘பல் முளைத்த கதை’ தெரியுமா உங்களுக்கு...?
சென்னை: பேஸ்புக்கில் தனது தங்க மீன்கள் படம் குறித்து தொடர்ந்து தகவல்களைத் தந்து நமது ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்.
கற்றது தமிழ் என்ற நல்ல படம் ஒன்றைக் கொடுத்த இயக்குநர் ராம், பொறுமையாக செதுக்கி வரும் படம் தான் 'தங்க மீன்கள்'. அப்பாவிற்கும், மகளுக்குமான அழகிய உறவை விளக்கும் படம் என்பது விளம்பரம் பார்க்கும் போதே தெரிகிறது.
2010ல் ஆரம்பிக்கப் பட்ட இப்படத்திற்கான வேலைகள் தற்போது ஒருவழியாக முடிந்து விட்ட போதும், படத்தை வெளியிட தியேட்டர் கிடைக்காத காரணத்தால் இன்னும் ரசிகர்களின் பார்வைக்கு தங்க மீன்கள் சிக்கவில்லை.
இந்நிலையில், தனது பட நாயகி செல்லம்மாவிற்கு பல் முளைத்த கதையை இப்படி காமெடியாக பேஸ்புக்கில் போட்டிருக்கிறார் ராம்...

பல் முளைத்த கதை...
திரைவரலாற்றில் ஒரு படம் தாமதம் ஆவது என்பது ஒன்றும் புதிததல்ல. தாமதங்கள் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமாக தன் வினையை ஆற்றும். தங்கமீன்களில் அதன் வினைகளில் ஒன்றுதான், " பல் வளர்ந்த கதை ".

பல் விழுந்திடுச்சு...
சாதனாவை செல்லம்மாள் பாத்திரத்திற்கு தேர்வு செய்த நாளில் எடுத்தப் புகைப்படம். (2010)

லைட்டா பல் எட்டி பார்க்குது...
சாதனா செல்லம்மாவாக நடித்த முதல் நாள். (2011)

முளைச்சிருச்சு...
சாதனா செல்லம்மாவாக கடைசிக்கு முந்தையப் படப்பிடிப்பில். (2012)

விழுந்த சுவடே இல்லை...
சாதனா இசை வெளியீட்டு விழாவின் போது. (2013)

கதைக்குள் கதையா...
ராம்மின் இந்த ஸ்டேட்டஸ்க்கு கமெண்ட் கொடுத்துள்ளார்கள் சில ரசிகர்கள். அதில் ஒருவர் இது கூட நல்ல ஒரு கதையாகத் தான் இருக்கிறது. பேசாமல் இதை வைத்துக் கூட ஒரு படம் எடுக்கலாம் போல எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவரோ, ‘கதைக்குள் கதை' என கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











