விவசாயி.. விவசாயி.. பழைய ஜோக்கு தங்கதுரையின். புது கெட்டப்!

சென்னை :பழைய ஜோக்கு தங்கதுரை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ரசிகர்களை ஆச்சரியபடுத்தியுள்ளது.

Recommended Video

விவசாயத்தை போற்றுவோம் | Vijay TV Thangadurai & Dheena Lock down Life

விஜய் டிவி புகழ் தங்கதுரை எப்போதும் பழைய ஜோக்கு சொல்லி சிரிக்க வைக்கிறேன் என்று ரசிகர்களை கோபமடைய செய்வார். இதனால் இவர் பெயரை பழைய ஜோக்கு தங்கதுரை ஆனது. தற்போது இவர் கிராமத்தில் இருந்த படி விவசாயம் செய்து ஒரு வீடியோ பதிவை பதிவேற்றியுள்ளார் .

Thangadurai has shared a video

தங்கதுரை பதிவேற்றியுள்ள காணொளியில் முதலில் வயலில் மாட்டை வைத்து உழவு செய்கிறார். பின்னர் டிராக்டர் ஓட்டி அசத்துகிறார் பின்னர் வயலுக்கு உரம் தெளிக்கிறார். மேலும் ஊர் விவசாயியுடன் இணைந்து மாட்டு வண்டி ஓட்டி வருகிறார் இறுதியாக மாட்டிற்கு உணவளிக்கிறார். இப்படி இந்த காணொளி முழுவதும் தான் ஒரு விவசாயியாக வாழ்ந்து கொண்டிருப்பதை பகிர்ந்து இருக்கிறார் தங்கதுரை .

இந்த காணொளி அனைத்திலும் அஃதாவது ஒவ்வொரு வேலை செய்யும் போது ஒவ்வொரு பாட்டை பின்னணியில் பதிவிட்டுள்ளார். இதில் மாட்டை உழவுக்கு எடுத்து செல்லும் ஒரு பாடலும், டிராக்டர் ஓட்டும் போது எம்.ஜி.ஆரின் விவசாயி பாடலும் மற்றும் மாட்டிற்கு உணவளிக்கும் போது 'செண்பகமே' பாடல் என்று பல பழைய பாடல்களுடன் கலகலப்பாக இந்த காணொளியை பதிவேற்றி ரசிகர்களை உற்சாகபடுத்தியிருக்கிறார் தங்கதுரை .

Thangadurai has shared a video

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆடிபோயுள்ளனர் ஏனெனில் தங்கதுரையை இதற்கு முன் யாரும் இவ்வாறு கிராமத்தில் விவசாயி கெட்டப்பில் பார்த்தது கிடையாது. இதனால் இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்கதுரையை இப்படியே இருங்கள் என்று வாழ்த்தி வருகின்றனர் .

ஆனால் அதிலும் சில தீவிர தங்கதுரையின் ரசிகர்கள் 'தங்கதுரை அண்ணே' மாட்டுக்கு ஏதும் உங்க ஜோக்க சொன்னீங்களா என்று கிண்டல் செய்து வருகின்றனர். தங்கதுரை சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் போர் அடிக்கும் நேரத்தில் தன் இணைய பக்கத்தில் ஏதேனும் ஒரு பழைய ஜோக்கை சொல்லி ரசிகர்களை நகைச்சுவையாக கடுப்பேற்றி விடுவார்.

Thangadurai has shared a video

இந்த காணொளியை பதிவிட்ட தங்கதுரை விவசாயத்தை போற்றுவோம் என்று கூறியுள்ளார். ஆனால் இது இப்போது கொரன்டைன் நேரத்தில் எடுக்கபட்ட வீடியோவா அல்லது பழைய வீடியோவா என்பதை அவர் பதிவு செய்யவில்லை.

Thangadurai has shared a video

பழைய ஜோக்கு தங்கதுரை பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் பின்னும் அவர் அதிகபடியான படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் ஆனால் தற்போது கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு அனைத்து தொழில்களையும் முடக்கியுள்ளதால் கொரன்டைன் முடிந்தவுடன் தங்கதுரையின் பல அப்டேட்கள் வரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X