பின்னாடி அப்பளம் போல நொறுங்கிய கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தங்கலான் நடிகர் சம்பத்ராம்!
சென்னை: காஞ்சனா, மாரி, புலி, காஞ்சனா 3, விக்ரம், தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் சம்பத்ராம் நேற்று இரவு எதிர்பாராமல் நடைபெற்ற கார் விபத்தில் சிக்கினார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரது உயிர் தப்பியது.
வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து பிரபலமானவர் சம்பத்ராம். 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், வடிவேலு, லைலா நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சம்பத்ராம்.

வல்லரசு, உன்னைக் கொடு என்னை தருவேன், தீனா, தவசி, ரெட், ரமணா, ஆஞ்சனேயா, ஜனா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், செல்லமே, திருப்பாச்சி, ஆதி, ஆள்வார், போக்கிரி, வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
வில்லன் நடிகர்: விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாகவும் வில்லன் கூட்டத்தில் அடியாளாகவும் நடித்துள்ளார் நடிகர் சம்பத்ராம். தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். எத்தனை மனிதர்கள், ருத்ர வீணை, வேலம்மாள் உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களிலும் பப்கோவா என்கிற ஜீ5 வெப்சீரிஸிலும் இவர் நடித்துள்ளார்.

கார் விபத்து: நேற்று இரவு சென்னை கிண்டி அருகே நடிகர் சம்பத்ராம் பயணித்த கார் திடீரென எதிர்பாராமல் விபத்துக்குள்ளானது.. பின்னால் வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர்த் தப்பினர். காயம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்குச் சென்று நடிகர் சம்பத்ராம் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார்.

தங்கலான் படத்தில்: ஜெயம் ரவி நடித்த அகிலன் படத்திற்கு பிறகு தமிழில் இரும்பன், காட்டில், சிக்லெட்ஸ் எனும் சிறு சிறு படங்களில் மட்டுமே நடித்து வந்த சம்பத்ராம் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் காடையனாக சியான் விக்ரம் நடித்த போது அவருடன் நடித்திருப்பார். மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியான தங்கமணி படத்திலும் இவர் நடித்துள்ளார். தமிழில் ஆகஸ்ட் 15ம் தேதி வெள்யான தங்கலான் திரைப்படம் 100 கோடி வசூல் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த வாரம் செப்டம்பர் 6ம் தேதி இந்தியில் தங்கலான் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











