Thangalaan: அடுத்தக் கட்டத்துக்குச் சென்ற தங்கலான்... முதல் ஆளாக சியான் விக்ரம் செய்த சம்பவம்!
சென்னை: பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் பா ரஞ்சித். இந்நிலையில், தங்கலான் படத்திற்காக விக்ரம் முதல் ஆளாக தரமான சம்பவம் செய்துள்ளார்.
தங்கலான் படத்திற்காக விக்ரம் செய்த சம்பவம்
கோலிவுட்டில் வெரைட்டியான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சீயான் விக்ரம், தற்போது தங்கலான் படத்தில் நடித்துள்ளார். மஹான், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக தங்கலான் காணப்படுகிறது. சீயான் விக்ரம் முதன்முறையாக பா ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதே இதன் காரணமாகும்.

அட்டக் கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, துருவ நட்சத்திரம் என தரமான படங்களை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். அதனால், இந்தமுறை விக்ரம் உடன் இணைந்து இன்னும் மாஸ் காட்டியிருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படம் கேஜிஎஃப் எனப்படும் கோலார் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது.
இதற்காக விக்ரம் வழக்கம்போல ரொம்பவே வித்தியாசமான கெட்டப்பில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். தங்கலான் டீசரிலேயே இதனை பார்க்க முடிந்தது. விக்ரமின் மரண மாஸ் ஆக்டிங், மேக்கிங், பின்னணி இசை, சினிமோட்டோகிராபி என அனைத்தும் செம்ம கிளாஸாக இருந்தது. இதனால் தங்கலான் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தங்கலான் படத்தில் விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பை முடித்துவிட்ட பா ரஞ்சித் போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாகிவிட்டார். அதேபோல் விக்ரமும் தனது போர்ஷனுக்கு டப்பிங் கொடுத்துவிட்டார். தங்கலான் படத்திற்காக டப்பிங் கொடுத்த விக்ரமின் போட்டோஸ் வைரலாகி வருகின்றன. இதில் விக்ரமுடன் பா ரஞ்சித் உட்பட அவரது டீமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரமை தொடர்ந்து மற்ற நடிகர்களும் டப்பிங் கொடுக்க ரெடியாகிவிட்டதாக தெரிகிறது. இதனால் விரைவில் தங்கலான் ரிலீஸ் தேதி பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது. பா ரஞ்சித் கேரியரில் தங்கலான் தரமான படமாக இருக்கும் என ஏற்கனவே சில சினிமா பிரபலங்கள் அப்டேட் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











