Thangalaan: லால் சலாம், அயலான் வரிசையில் சீயானின் தங்கலான்... 2024 பொங்கல் ரேஸில் சம்பவம் உறுதி!!

சென்னை: பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக மிரட்டியவர் சீயான் விக்ரம்.

அதனைத் தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

 Thangalaan: Chiyaan Vikrams Thangalaan is most likely to be released for Pongal

உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் ஹிஸ்டாரிக்கல் ஜானர் படமாக உருவாகிறது தங்கலான்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்ட தங்கலான், பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொங்கல் ரிலீஸில் இணையும் தங்கலான்..? சேது படத்தில் இருந்து கம்பேக் கொடுத்த விக்ரம், அதன் பின்னர் சீயானாக மிரட்டி வருகிறார். மணிரத்னம், ஷங்கர் போன்ற முன்னணி இயக்குநர்களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவரான விக்ரம், வெரைட்டியாக நடிப்பதையே அதிகம் விரும்புகிறார். இறுதியாக விக்ரம் நடிப்பில் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார். ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரமின் நடிப்பு ரசிகர்களை சிலிர்க்க வைத்தது.

பொன்னியின் செல்வன் வெளியானதுமே பா ரஞ்சித்துடன் இணைந்தார் விக்ரம். அதன்படி முதன்முறையாக இணைந்த சீயான் விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. கோலார் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து, ஹிஸ்டாரிக்கல் படமாக தங்கலான் உருவாகிறது. விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

 Thangalaan: Chiyaan Vikrams Thangalaan is most likely to be released for Pongal

தங்கலான் படத்தின் மூலம் முதன்முறையாக பா ரஞ்சித்துடன் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். விக்ரம், பா ரஞ்சித், ஜிவி பிரகாஷ் என இந்தக் கூட்டணிக்கு இன்னும் மாஸ் கூடியுள்ளது. இந்நிலையில் தங்கலான் படத்திற்காக விக்ரமும் தனது கெட்டப்பை மொத்தமாக மாற்றியுள்ளார். தங்கலான் கெட்டப்பில் விக்ரமின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாம்.

ஷூட்டிங் முடிந்த கையோடு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் வேகம் கொடுக்க இயக்குநர் பா ரஞ்சித் முடிவு செய்துள்ளார். இதனால், விரைவில் தங்கலான் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு ரெடியாகிவிட்டதாம். அதன்படி, தங்கலான் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரேஸில் களமிறங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அதேநேரம் சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான் படங்களும் பொங்கலுக்கு வெளியாகின்றன. இந்த வரிசையில் சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. ஆகமொத்தம் இதுவரை அபிஸியலாக 3 படங்களும், அதனைத் தொடர்ந்து விக்ரமின் தங்கலானும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X