கோலார் தங்க வயலில் மார்கழியில் மக்களிசை.. இயக்குநர் ரஞ்சித்தின் சூப்பர் பிளான்!

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து வரும் மார்கழியில் மக்களிசை இசை நிகழ்ச்சி இந்த முறை கோலார் தங்க வயலில் நடைபெற உள்ளது

சென்னை 28 திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்றிய பா. ரஞ்சித், அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

முதல் திரைப்படத்திலேயே வித்தியாசமான கதையை கொடுத்து மக்கள் மத்தியில் பெயர் எடுத்தார்.

Thangalaan director pa ranjith organized margazhiyil makkalisai 2023

இயக்குநர் பா ரஞ்சித்: முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மெட்ராஸ் படத்தை இயக்கினார். சுவரில் நடக்கும் அரசியல் சண்டை குறித்து அப்பட்டமாக காட்சிப்படுத்தி பேசி நன்மதிப்பை பெற்று, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கினார். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட பா. ரஞ்சித் சமூக கருத்துடைய படங்களை இயக்கினார்.

ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்: பா.ரஞ்சித் தற்போது, அதிக பொருட்செலவில் உருவாகி வரும் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

கலாச்சார நிகழ்ச்சி: இயக்குநர் பா ரஞ்சித் தொடர்ச்சியாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தலித் மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் திரைப்படத் திருவிழா, ஒவ்வொரு வருடமும் பல்வேறு சென்னை மற்றும் பிற மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.

கோலார் தங்க வயல்: இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டும் முற்றிலும் புதிய நிலப்பரப்பில் நடைபெற இருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோலார் தங்க வயலில் இருந்த பழங்குடி மக்களின் போராட்ட வரலாற்றை இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளார் பா ரஞ்சித். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை கே.ஜி.எஃப் நிலப்பரப்பில் எடுத்தார். தற்போது அதே நிலத்தில் மார்கழி மக்களிசை வரும் டிசம்பர் 23ஆம் தேதி கே.ஜி எஃப் மற்றும் 24ஆம் தேதி ஓசூரிலும் இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு எந்த வித கட்டணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X