Thangalaan Public Review: நேஷ்னல் அவார்ட், ஆஸ்கார் கிடைக்கும்.. சியானுக்காக ரஞ்சித் செதுக்கியிருக்காரு

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி உள்ளிட்டோர் நடிப்பில் இன்று அதாவது ஆக்ஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியுள்ள படம் தங்கலான். மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்தப் படத்திற்கு இவரது இசைக்காகவே தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது கருத்தினைத் தெரிவித்து வருகின்றனர். அதில் படம் பார்த்த ரசிகர் ஒருவர்," கோலார் தங்கவயலில் தங்கம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை ரஞ்சித் தனது ஸ்டைலில் சொல்லியுள்ளார். ஒவ்வொரு காட்சிக்கும் ஜி.வி. பிரகாஷ் ஒவ்வொரு பி.ஜி.எம் போட்டுள்ளார். படத்தின் கிராஃப் ஏறி ஏறி இறங்குகின்றது. முதல் பாதி ஓ.கேவாக உள்ளது, இரண்டாம் பாதி சூப்பராக உள்ளது. படத்தில் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

Thangalaan Pa Ranjith Vikram

மற்றொரு ரசிகரோ," படத்தினை பா. ரஞ்சித் சிறப்பாகவே உருவாக்கியுள்ளார். படத்தினை சியான் மற்றும் ஜி.வி. பிரகாஷ்குமாருக்காக பார்க்கலாம். தங்கலான் போன்ற கதைக்களம் கொண்ட படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் செட் ஆக கொஞ்சம் டைம் எடுக்கும். படக்குழுவினரின் உழைப்புக்கு இந்தப் படம் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். ஒருமுறை பார்ப்பதற்கு படம் தரமான படம்" என தெரிவித்துள்ளார்.

மற்றொரு ரசிகரோ, "விக்ரமின் கோப்ரா சரியா போகவில்லை. இந்த படம் முழுக்க முழுக்க விக்ரமுக்கானது. படம் முழுக்க விக்ரம் வருகின்றார். விக்ரமின் நடிப்புக்கு தேசிய விருது என்ன ஆஸ்காரே கொடுக்கலாம். சியானுக்காக ரஞ்சித் பாத்து பாத்து செதுக்கி இருக்காரு" என தெரிவித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்காக சிறப்பாக இசை அமைத்துள்ளார். இவ்வளவு பிசியான நேரத்திலும் எப்படி உலகத்தரமான இசையை அமைத்தார் எனத் தெரியவில்லை. விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் சிறப்பாக நடித்துள்ளனர் என தெரிவித்துள்ளார் மற்றொருவர்.

நாம் எதிர்பார்த்ததைவிடவும் இந்தப் படம் சிறப்பாக உள்ளது. விக்ரமின் நடிப்பு, ரஞ்சித்தின் அரசியல், உண்மையான வரலாறு என படம் ஹாலிவுட் லெவலில் இருக்கு. படம் முடிந்ததே தெரியல. படத்தில் விக்ரமும் ஜி.வி. பிரகாஷும்தான் டாப். விக்ரமுக்கு 100 சதவீதம் விருது நல்லா இருக்கு. முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என படம் தரமாக உள்ளது. தங்கலான் படத்தின் 2ஆம் பாகம் வந்தால் சிறப்பாக இருக்கும்.

விக்ரமின் நடிப்பிற்காகவே இந்தப் படத்தினைப் பார்க்கலாம். அவரது நடிப்பைப் பார்த்து நான் அழுதுவிட்டேன் என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் தரத்தில் படம் உள்ளது. ஒவ்வொரு காட்சியும் படம் சிறப்பாக உள்ளது" எனவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X