Actor Vikram: மொட்டை தலையுடன் மாஸ் லுக்கில் விக்ரம்.. சும்மா தெறியா இருக்கே!

சென்னை: சீயான் விக்ரம் மொட்டை தலையுடன் புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் அப்படியே ஆடிப்போனார்கள்.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

thangalaan Hero Actor Vikram mass look photos trending on social media

பொன்னியின் செல்வன் படத்துக்குப்பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார்.

காயமடைந்த விக்ரம்: நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கேஜிஎஃப் பகுதியில் அண்மையில் நிறைவடைந்தது. இந்தப் படப்பிடிப்பின்போது நடிகர் விக்ரமின் விலா எலும்பில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: அதன்படி, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் இந்த கடந்த மாதம் தொடங்குகிறது. ஜூலை முதல் வார இறுதி கட்டபடப்பிடிப்பு நிறைவந்தது. இப்படத்தின் டிரைலரைப் பார்த்து மிரண்டு போன பேன்ஸ் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

thangalaan Hero Actor Vikram mass look photos trending on social media

மாஸ்டர் பீஸ்: கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தின் கதை எடுக்கப்பட்டது. ரஞ்சித் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வரிசையில் தங்கலான் திரைப்படமும் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விக்ரமின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொட்டை தலையுடன் விக்ரம்: இந்நிலையில், சீயான் விக்ரம் மொட்டை தலையுடன் பிரெஞ்ச் பியர்டு தாடியுடன் சும்மா தெறியாக இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த படத்திற்கான கெட்டப்பாக என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். நடிகர் விக்ரம் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X