Thangalaan: கங்குவா, தங்கலான் ரிலீஸில் சிக்கல்... திடீர்ன்னு என்ன பிரச்சினை... இதுதான் காரணமா..?
சென்னை: தங்கலான், கங்குவா இந்த இரண்டு படங்களையும் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தங்கலான் திரைப்படம் சொன்னபடி ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
கங்குவா, தங்கலான் ரிலீஸில் சிக்கல்
பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தை பின்னணியாக வைத்து பீரியாடிக் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்தப் படத்தை ஆஸ்கர் வரை கொண்டு செல்வோம் என ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா கூறியிருந்தார். இதனால் தங்கலான் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது.

சியான் விக்ரம் உடன் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் தங்கலான் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாததால் தங்கலான் ரிலீஸ் தள்ளிப் போகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதற்கு உண்மையாகவே கிராபிக்ஸ் வேலைகள் காரணம் இல்லை என சொல்லப்படுகிறது.
இதேபோல் சூர்யாவின் கங்குவா ரிலீஸிலும் சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்தது. சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா உள்ளிட்ட படக்குழுவினர் போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
இந்தப் படமும் கிராபிக்ஸ் வேலைகளுக்காக தாமதமாக வெளியாகலாம் என சில தினங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. தங்கலான், கங்குவா இரண்டு படங்களுமே பீரியாடிக் ஜானரில் உருவாகியுள்ளதால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் இருக்கும் என்பது உண்மை தான். ஆனால், ஃபைனான்ஸ் பிரச்சினை காரணமாக தான் இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதனை படக்குழு தரப்பில் இருந்து வெளிப்படையாக அறிவிக்காமல் கிராபிக்ஸ் வேலைகளை மட்டும் காரணமாக சொல்லப்படுகிறதாம். சில தினங்களுக்கு முன்னர் பருத்திவீரன் சர்ச்சையில் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா பேசியது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெரும்பாலானோர் இயக்குநர் அமீருக்கு ஆதரவாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











