Thangalaan: விக்ரம் பிறந்தநாள் அதுவுமா இப்படியா... ரத்தம் தெறிக்கும் தங்கலான் மேக்கிங் க்ளிம்ப்ஸ்!
சென்னை: கோலிவுட் ரசிகர்களால் சீயான் எனக் கொண்டாடப்படும் விக்ரம், இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், விக்ரம் ரசிகர்களுக்காக தங்கலான் படக்குவினர் தரமான மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், இந்த மேக்கிங் க்ளிம்ப்ஸில் விக்ரமை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வெளியானது தங்கலான் மேக்கிங் க்ளிம்ப்ஸ்: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சீயான் விக்ரம் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விக்ரம் நடிப்பில் இந்தாண்டு பொன்னியின் செல்வன் 2, தங்கலான் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. முக்கியமாக பொன்னியின் செல்வன் 2 வரும் 28ம் தேதி ரிலீஸாகிறது. இதனிடையே விக்ரம் பிறந்தநாளுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது தங்கலான் படக்குழு. பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் தங்கலான் திரைப்படம், பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. விக்ரமுடன் பசுபதி, பார்வதி மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விக்ரம் - பா ரஞ்சித் காம்போ முதன்முறையாக இணைந்துள்ளதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், தற்போது வெளியான தங்கலான் மேக்கிங் க்ளிம்ப்ஸ், படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்துள்ளது. ஜிவி பிரகாஷின் மிரட்டலான பின்னணி இசையுடன் தொடங்கும் இந்த மேக்கிங் வீடியோ, ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது. 1.50 நிமிடங்கள் வரை ஓடும் இந்த மேக்கிங் வீடியோ முழுவதும் அதிரடியான போர் காட்சிகளுடன் கூஸ்பம்ப் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கிறது.
முக்கியமாக விக்ரமின் லுக், அவரது பாடி லேங்குவேஜ் என எல்லாமே வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ளது. பீரியட் ஜானர் படம் என்பதால், ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் பா ரஞ்சித். மேக்கிங் வீடியோவே இப்படி இருந்தால், தங்கலான் படம் முழுவதும் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பா ரஞ்சித் ரத்தமும் சதையுமாக ஒரு படத்தை இயக்கி வருவது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான தங்கலான் மேக்கிங் வீடியோவில், அவர் உடல் முழுவதும் ரத்தம் வடிய மிக கோரமாக நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பிறந்தநாளுக்கே இப்படி கோரமாக மிரட்டினால், படம் ரிலீஸாகும் போது இன்னும் என்னென்ன சம்பவங்கள் இருக்குமோ என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்போகும் திரைப்படம் தங்கலான் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











