தங்கலான் படத்தின் 2வது பாடல் இன்று ரிலீஸ்! இசை வெளியீட்டு விழா தேதியும் அறிவிப்பு!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்த படம் ஆங்கிலேய இந்தியர் காலத்தினை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் லைவ் ஸ்வுண்ட் முறையை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு குறித்தும் இசை வெளியீட்டு விழா குறித்தும் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தங்கலான் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, படத்தில் நடித்த விக்ரம், பார்வதி திருவோத்து, மாளாவிகா மோகனன் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்தது தொடர்பாக பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்தனர். குறிப்பாக மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில், " படப்பிடிப்புத் தளத்திற்கு ஒருநாள் எருமை கொண்டு வரப்பட்டது.

Thangalaan Thangalaan Audio Launch Pa Ranjith

மிகப்பெரிய எருமை அது. அதனை நான் பார்ப்பதை பார்த்த இயக்குநர் பா. ரஞ்சித், பிடித்திருக்கின்றதா எனக் கேட்டார். நானும் ஆமாம் என சாதாரணமாகச் சொன்னேன். உடனே அவர், என்னை அந்த எருமை மீது ஏறச் சொல்லிவிட்டார். விளையாட்டுக்குச் சொல்கின்றார் என நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே என்னை அந்த எருமை மீது அமரவைத்து படப்பிடிப்பை நடத்தினார் எனக் கூறினார்.

Thangalaan Thangalaan Audio Launch Pa Ranjith

முதல் பாடல்: அதேபோல் இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் செலுத்திய உழைப்பு மற்றும் ஈடுபாடு என்பது, இதற்கு முன்னர் அவர் நடித்த அந்நியன், ஐ, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் செலுத்தியது, தங்கலான் படத்தில் செலுத்திய உழைப்போடு ஒப்பிட்டால் 3 சதவீதம்தான் என அவரே தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தின் முதல் பாடலான மேனா மினுக்கி பாடல் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Thangalaan Thangalaan Audio Launch Pa Ranjith

இசை வெளியீடு: இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடல், இன்று அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்றும் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் படக்குழுவினர் மும்பை, கொச்சி, ஹைதரபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று படத்தின் புரோமோசன் வேலைகளில் ஈடுபடவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X