அட்ஜெஸ்மெண்ட் செய்யறதுக்கு பதிலா.. இவரு படத்துல கௌரவமா நடிச்சுப்பேன்- நடிகை நெத்தியடி!

சென்னை: உலகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகியுள்ளது. இதில் சினிமா என்றால் பெண்கள் பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். தமிழ் சினிமா மட்டும் இல்லை ஒட்டுமொத்த உலக சினிமா வட்டாரங்களிலேயே, பெண் நடிகைகள் எதிர்கொள்ளும் மிகவும் முக்கியமான பிரச்னை அட்ஜெஸ்மெண்ட் என்பதுதான். சில தினங்களுக்கு முன்னர் மலையாள சினிமா உலகில் உள்ள அட்ஜெஸ்மெண்ட் குறித்து ஹேமா கமிஷன் அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்நிலையில் தங்கலான் படத்தில் நடித்த நடிகை தர்ஷினி மனம் திறந்து பேசியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆகஸ்ட் 15க்கு ரிலீஸ் ஆன படங்களில் பாக்ஸ் ஆஃபீஸில் மாபெரும் வெற்றி பெற்ற படம் என்றால் அது தங்கலான் படத்தைக் குறிப்பிடலாம். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் இந்தியிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

Thangalaan Pa Ranjith

படத்தில் நடித்த முன்னணி நடிகர்கள் மட்டும் இல்லாமல், படத்தில் நடித்திருந்த துணை நடிகர்கள் வரை அனைவருமே சிறப்பாக நடித்திருந்தனர். ஒருபடமாக தங்கலான் மாபெரும் வெற்றியைப் பெற முக்கியக் காரணம் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களின் உழைப்பைக் குறிப்பிடலாம். பல நடிகர்கள் மற்றும் நடிகைளுக்கு ஒரு வசனம் கூட இல்லை. இன்னும் சொல்லப்போனால், பல நடிகர் - நடிகைகளுக்கு ஒரு ஃபிரேம் கூட சரியாக வைக்கப்படவில்லை. அப்படி இருந்தும் இந்தப் படத்தில் பலர் நடித்துள்ளனர். இது தொடர்பாக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே, இயக்குநர் பா. ரஞ்சித் துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் கூறியுள்ளார்.

Thangalaan Pa Ranjith

பா. ரஞ்சித்: இயக்குநர் பா. ரஞ்சித் கூறியதை நன்றாக புரிந்து கொண்ட துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வெற்றிக்குப் பின்னரும் படக்குழுவினர் பலரும் பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். குறிப்பாக தங்கலானின் மகனாக நடித்த அசோகன் பல பேட்டிகளில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து வருகின்றார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து அவர் தெரிவித்து வருகின்றார். படத்தில் பெரும்பாலான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாகவும் அசோகன் கதாபாத்திரம் அமைந்தது. இந்த கதாபாத்திரத்தினை வளர்ந்து வரும் நடிகர் அர்ஜுன் ஏற்று நடித்துள்ளார்.

Thangalaan Pa Ranjith

அட்ஜெஸ்மெண்ட்: இந்நிலையில் படத்தில் நடித்த வளர்ந்து வரும் நடிகை, தர்ஷினி ஒரு இடத்தில் பேசுகையில் தங்கலான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணம் குறித்து பேசியுள்ளார். அதில், ஏதோ ஒரு படத்தில் நான் அட்ஜெஸ்மெண்ட் செய்து, யாரோ ஒருத்தருக்கு மிகவும் ஃபிளக்ஸிபிளாக இருப்பதற்கு பதிலாக, அந்தப் படத்திலும் ஆணுக்கு பணிவிடைகள் செய்யும் இடத்தில் வைத்து, என்னை அந்தப் படத்தின் கதாநாயகியாகவே காட்டுவதை விடவும், தங்கலான் படத்தில் நான் ஏதோ ஒரு பேக் - கிரவுண்டில் நின்று கொண்டு அழுதுட்டு போயிடுவேன். என் முகத்தில் கரிய பூசுங்க, உடம்பு முழுவதும் எதையோ பூசரீங்க. அப்படி இருந்தும் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு, ரொம்ப சந்தோஷமா இருக்கு, மன நிறைவா இருக்கு" என கூறிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தங்கலான் வசூல்: படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 26.44 கோடிகளை வசூல் செய்தது. இதனை படக்குழுவே தெரிவித்தது. மேலும் 2024ஆம் ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாக இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் அமைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாளில் படத்தின் வசூல் ரூபாய் 27.20 கோடிகளை வசூல் செய்தது. இதன் மூலம் படம் முதல் மூன்று நாட்களில் ரூபாய் 53. 64 கோடிகளை வசூல் செய்தது என படக்குழுவே தெரிவித்தது. படம் வெளியாகி இதுவரை உலகம் முழுவதும் தங்கலான் கிட்டத்தட்ட ரூபாய் 80 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X