Chiyaan Vikram Birthday - விக்ரம் பிறந்தநாளுக்கு செம சர்ப்ரைஸ்.. அறிவிப்பு கொடுத்த பா. இரஞ்சித்

சென்னை: Chiyaan Vikram Birthday (சியான் விக்ரம் பிறந்தநாள்) சியான் விக்ரம் பிறந்தநாள் அன்று தங்கலான் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்படும் என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.

இந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம். பெரும் போராட்டங்களுக்கு பிறகு சேது படம் மூலம் சினிமாவில் வாழ்க்கை பெற்ற விக்ரம் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை எடுத்தவர். இருப்பினும் அவருக்கான அங்கீகாரமோ, பெரும் வெற்றியோ இன்றுவரை கிடைக்கவில்லை என்றே பெரும்பாலான ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஒவ்வொரு படத்துக்கும் அளவுக்கு மீறிய உழைப்பை கொடுத்தாலும் விக்ரம் கொண்டாடப்படவில்லை என்ற கருத்தே பெரும்பாலும் நிலவுகிறது.

Thangalaan Movie Glimpse Will Release at Vikrams Birthday

தொடர் தோல்விகளில் சிக்கியிருக்கும் விக்ரம்: கடந்த சில வருடங்களாக விக்ரமுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த வெற்றி படமும் அமையவில்லை. சொல்லப்போனால் விக்ரமின் கடைசி ஹிட் படம் என்னவென கேட்டால் யாருக்கும் சட்டென்று நியாபகம் வராத வகையில்தான் இருக்கிறது அவரது சமீபத்திய பயணம். பொன்னியின் செல்வன் வெற்றி படமாக கருதப்பட்டாலும் அதில் பலர் நடித்திருப்பதால் அந்த வெற்றி முழுமையாக விக்ரமுக்கு சேராது என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அதேபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா படமும் தோல்வியே அடைந்தது.

பா.இரஞ்சித்துடன் இணைந்திருக்கும் விக்ரம்: விக்ரமுக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதனால் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் விக்ரம். படத்துக்கு தங்கலான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவருடன் பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். கோலார் தங்க வயலில் தமிழர்கள் பட்ட இன்னல்கள் பற்றி தங்கலான் படம் உருவாகி வருகிறது. படத்தின் ஷுட்டிங் 80 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது.

தங்கலானில் இணைந்த ஹாலிவுட் நட்சத்திரம்: இதற்கிடையே பா.இரஞ்சித் இயக்கும் படம் என்றால் அதில் டீட்டெயிலிங்குக்கு எந்தப் பஞ்சமும் இருக்காது என்பதால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் விக்ரம் ரசிகர்கள். அதுமட்டுமின்றி தங்கலான் படத்தில் நடிப்பதற்கு ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோனும் கமிட்டாகியிருக்கிறார். எனவே இப்படம் பெரும் கவனத்தை ஈர்த்து விக்ரமுக்கு மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கை திரையுலகில் நிலவிக்கொண்டிருக்கிறது.

Thangalaan Movie Glimpse Will Release at Vikrams Birthday

விக்ரம் பிறந்தநாளுக்கு கிளிம்ப்ஸ் வீடியோ: இந்நிலையில் விக்ரம் தனது பிறந்தநாளை ஏப்ரல் 17ஆம் தேதி கொண்டாடவிருக்கிறார். அதனையொட்டி தங்கலான் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அன்றைய தினம் வெளியிடப்படும் என இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இன்னும் 25 நாட்களுக்கான ஷூட்டிங் பாக்கி இருப்பதாக பா.இரஞ்சித் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X