Thangalaan: “தங்கலான் டீசர் உலகத்தரத்தில் இருக்கும்... விக்ரம் வேற லெவல்..” ஹைப் கொடுத்த பிரபலம்

சென்னை: சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் திரைப்படம் தங்கலான்.
இந்தப் படம் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிறது.

பீரியட் ஜானர் படமாக உருவாகும் தங்கலான் டீசர், விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தங்கலான் டீசன் பற்றி தரமான அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

Thangalaan: Producer Dhananjeyan Gave a ultimate update From Vikram’s Thangalaan

தங்கலான் டீசரில் தரமான சம்பவம்

விக்ரம் நடிப்பில் கடைசியாக மஹான், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பல வருடங்களாக கிடப்பில் கிடந்த துருவ நட்சத்திரம் அடுத்த மாதம் வெளியாகிறது. விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் ஸ்பை த்ரில்லர் படமாக துருவ நட்சத்திரம் உருவாகியுள்ளது. இதனிடையே தங்கலான் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விக்ரம்.

இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என தான் இயக்கிய படங்களில் தனி முத்திரை பதித்துள்ளார் பா ரஞ்சித். இதனால் விக்ரம் உடன் அவர் முதன்முறையாக இணையும் தங்கலான் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கேஜிஎஃப் எனப்படும் கோலார் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து, ஹிஸ்டாரிக்கல் படமாக உருவாகிறது தங்கலான்.

விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர், ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தங்கலான் படத்தின் மூலம் முதன்முறையாக பா ரஞ்சித்துடன் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். மிரட்டலான கூட்டணியில் உருவாகும் தங்கலான், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து தங்கலான் அப்டேட்களை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி முதலில் தங்கலான் டீசர் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் ஏற்கனவே ட்வீட் செய்திருந்தார். அதில் விரைவில் தங்கலான் சம்பவம் வரவிருக்கிறது. தங்கலான் டீசர் ரெடி என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயனும் தங்கலான் டீசர் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவும் வைரலாகி வருகிறது.

அதில், தங்கலான் படத்தின் கதை தனக்கு தெரியும் எனவும், மேக்கிங் சீன், டீசர் ஆகியவற்றை தற்போது தான் பார்த்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எனது வார்த்தையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், தங்கலான் டீசர் உலகத் தரத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படம் 2024ம் ஆண்டில் தமிழ் சினிமாவின் லேண்ட்மார்க்காக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் சீயான் விக்ரம் இப்படத்திற்காக நிறைய அங்கீகாரம் பெறுவார். பா ரஞ்சித் இயக்கிய படங்களில் தங்கலான் தான் பெஸ்ட்டாக இருக்கும் எனவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஹைப் கொடுத்துள்ளார். இதனால், விக்ரம் ரசிகர்களிடம் தங்கலான் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X