Thangalaan Update: இன்னும் 25 நாள் தான் ஷூட்டிங்... தங்கலான் ரிலீஸ் அப்டேட் கொடுத்த பா ரஞ்சித்

சென்னை: விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார்.

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் தங்கலான் பீரியட் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

 Thangalaan released by the end of this year... Pa Ranjith has given an update

இந்தப் படத்தின் படப்பிடிப்பு புகழ்பெற்ற கேஜிஎஃப் சுரங்கத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தங்கலான் படத்தின் ஷூட்டிங் குறித்தும், ரிலீஸ் தேதி பற்றியும் இயக்குநர் பா ரஞ்சித் அப்டேட் கொடுத்துள்ளார்.

தங்கலான் ரிலீஸ் அப்டேட்

 Thangalaan released by the end of this year... Pa Ranjith has given an update
சீயான் விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் தங்கலான் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்த கொத்தடிமைகள் குறித்த பீரியட் படமாக இது உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய பா ரஞ்சித், தங்கலான் படம் குறித்த பல புதிய தகவல்களை கூறியுள்ளார். முதலில் சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு, அதன்பின்னர் கேஜிஎஃப் சுரங்கத்தில் நடைபெற்று வந்தது. இதுவரை மொத்தம் 55 நாட்கள் அங்கு ஷூட்டிங் நடந்ததாகவும், இன்னும் 25 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டும் எனவும் பா ரஞ்சித் கூறியுள்ளார்.

அதேபோல், மொத்தம் 80% படப்பிடிப்பை முடித்துவிட்டோம், இன்னும் 20% எடுத்துவிட்டால், தங்கலான் ஷூட்டிங் முடிந்துவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேஜிஎஃப் பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பில் நிறைய கஷ்டங்கள் இருந்ததாகவும், ரொம்பவே ரிஸ்க் எடுத்து ஒரு தரமான படைப்பை மக்களுக்கு கொடுக்கவுள்ளோம் எனவும் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தின் கிராபிக்ஸ், VFX பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் முடிந்துவிடும். அதன்பின்னர் உடனே போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதன்படி எல்லா வேலைகளையும் திட்டமிட்டபடி முடித்துவிட்டால் இந்தாண்டு (2023) இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் பா ரஞ்சித் கூறியுள்ளார். விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் தங்கலான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

 Thangalaan released by the end of this year... Pa Ranjith has given an update

பா ரஞ்சித் படங்களில் தங்கலான் மிக முக்கியமான படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் பா ரஞ்சித். ஏற்கனவே இதன் முதல் பாகம் 2021ம் ஆண்டு நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியானது. இதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாவது பாகமும் ரிலீஸாகவுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தங்கலான் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால், விரைவில் சார்ப்பட்டா பரம்பரை 2 தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X