Thangalaan Teaser: ரிலீஸ் தேதியுடன் தங்கலான் டீசர்... இணையத்தில் லீக்கான அபிஸியல் அப்டேட்!

சென்னை: விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணி முதன்முறையாக தங்கலான் படத்தில் இணைந்துள்ளனர்.

பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thangalaan Teaser: Thangalaan teaser will be out with the release date of the movie

தங்கலான் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விரைவில் வெளியாகும் தங்கலான் டீசருடன், ரிலீஸ் தேதியையும் அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

ரிலீஸ் தேதியுடன் தங்கலான் டீசர்
கோலிவுட்டின் முன்னணி நடிகரான விக்ரம், தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என பிஸியாக இருந்த விக்ரம், PS 2 ரிலீஸுக்கு முன்னரே பா ரஞ்சித்துடன் இணைந்தார். அதன்படி, விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு தங்கலான் என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆனது.

இந்தப் படம் கேஜிஎஃப் எனப்படும் கோலார் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகிறது. இதற்காக விக்ரம் ரொம்பவே வித்தியாசமான கெட்டப்புக்கு மாறியுள்ளார். தங்கலான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட விக்ரமின் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகின. இதனால் படத்தில் விக்ரமின் நடிப்பு அசுரத்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கலான் படத்தில் விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். விக்ரம், பா ரஞ்சித், ஜிவி பிரகாஷ் என இக்கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதும் தங்கலான் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் தங்கலான் படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த டீசர் 1.30 நிமிடம் இருக்கும் என்பதும் உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே தங்கலான் டீசர் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியிருந்தார். பா ரஞ்சித் கேரியரில் தங்கலான் தரமான படமாக இருக்கும் எனவும், டீசர் மிரட்டலாக உருவாகியுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். அதேபோல், விக்ரமிற்கும் இந்தப் படம் பெரியளவில் பெயர் வாங்கிக் கொடுக்கும் எனக் கூறியிருந்தார். இதனால் தங்கலான் டீசருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தங்கலான் டீசருடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அடுத்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக தங்கலான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை விரைவில் வெளியாகவுள்ள டீசரில் தங்கலான் படக்குழு அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X