கோபப்பட்ட சியான் விக்ரம்.. கொந்தளித்த ரசிகர்கள்.. தங்கலான் டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு?
சென்னை: விஜய், அஜித், சூர்யா அளவுக்கு சியான் விக்ரமுக்கு ரசிகர்கள் இல்லை என்பது போன்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில், தனது ரசிகர்கள் பலத்தை தப்பா எடை போட வேண்டாம் என சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் சியான் விக்ரம் சொன்னாலும் சொன்னார் தங்கலான் படத்தின் டிக்கெட் புக்கிங் அனல் பறக்கிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்துக்கு போட்டியாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் அருள்நிதி நடித்துள்ள டிமான்ட்டி காலனி 2 படமும் வெளியாகிறது. மேலும், கீர்த்தி சுரேஷ் இந்தி திணிப்புக்கு எதிராக நடித்துள்ள ரகு தாத்தா படமும் வெளியாகிறது.

இந்த மும்முனைப் போட்டியில் சியான் விக்ரமின் தங்கலான் படத்துக்கு பெரிதாக வசூல் எல்லாம் வராது என சொல்லப்பட்ட நிலையில், விக்ரம் ரசிகர்கள் வெகுண்டு எழுந்து வியாழக்கிழமைக்கான டிக்கெட்டுகளை அதிரடியாக அட்வான்ஸ் புக்கிங்கில் நிரப்பி வருகின்றனர்.
தங்கலான் டிக்கெட் புக்கிங் தாறுமாறு: புக் மை ஷோவில் நாளை வெளியாகவுள்ள தங்கலான் படத்திற்கான டிக்கெட் புக்கிங் பல தியேட்டர்களில் காலை முதல் இரவு காட்சிகள் வரை புக் செய்யப்பட்டு சிகப்பு நிறத்தில் காணப்படுவது சியான் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாக தங்கலான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சியான் விக்ரம் போட்டுள்ள கடுமையான உழைப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக ரசிகர்கள் டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.

பா. ரஞ்சித்துக்கு செக்?: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக திமுகவை தொடர்ந்து எதிர்த்து பேசி வந்த பா. ரஞ்சித்துக்கு செக் வைக்கும் விதமாகவே ரெட் ஜெயண்ட் நிறுவன படமான டிமான்ட்டி காலனி 2வை உதயநிதி களமிறக்கி உள்ளார் என்கிற விமர்சனங்கள் சினிமா வட்டாரத்தில் எழுந்து வரும் நிலையில், சமீபத்தில், அந்த வழக்கில் அரசு சரியான விசாரணையை மேற்கொண்டு வருவதாக பா. ரஞ்சித் சமாதான முறையில் பேச ஆரம்பித்ததே தங்கலான் படத்தின் ரிலீஸுக்கு பிரச்சனை வரக் கூடாது என்பதற்காகத்தான் என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
டிமான்ட்டி காலனி 2 டஃப் கொடுக்குமா?: அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் தங்லான் படத்துக்கு டஃப் கொடுக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. அந்தளவுக்கு அந்த படத்திற்கும் செலிபிரிட்டி ஷோவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனாலும், அதையெல்லாம் தாண்டி தங்கலான் மகுடம் சூடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் படம் எப்படி இருக்கும்?: இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா படமும் பொலிட்டிக்கல் சட்டையர் படமாக உருவாகி இருப்பதாக கூறுகின்றனர். இந்தி திணிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான திணிப்புகளை பேசும் படமாக ரகு தாத்தா உருவாகி இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த வாரம் தமிழ் சினிமாவில் கடும் போட்டி நிலவினாலும் ரசிகர்களுக்கு அனைத்து படங்களும் தரமான படமாக வெளியாகி என்டர்டெயின் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை 3 படங்களும் வெளியான பின்னர், மக்கள் அதிக முக்கியத்துவம் எந்த படத்துக்கு கொடுக்கின்றனர் என்பது தெரிந்து விடும். இதுவரை டிக்கெட் புக்கிங் ரேஸில் தங்கலான் முதலிடத்திலும் டிமான்ட்டி காலனி 2 இரண்டாம் இடத்திலும், ரகு தாத்தா 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











