தங்கலான் டிரெய்லர் சும்மா தாறுமாறா மிரட்டுது.. சியான் விக்ரம் செம சம்பவம் செஞ்சிட்டாரே!

சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள தங்கலான் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

கேஜிஎஃப்பின் உண்மையான கதைக்களத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம் என பா. ரஞ்சித் கூறியிருந்தார். நடிகர் சியான் விக்ரமின் தோற்றம் மற்றும் நடிப்பு தாறுமாறாக உள்ளது.

Thangalaan vikram pa ranjith

சியான் விக்ரம் இந்த படத்துக்காக கடுமையான உழைப்பை கொட்டி நடித்துள்ளது டீசரை பார்க்கும்போதே தெரிந்த நிலையில், படத்தின் டிரெய்லர் அதை விட மிரட்டுகிறது.

மாளவிகா மோகனன் இந்த படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு டிரெய்லரில் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்துக் கொண்டிருக்கிறது.

Thangalaan vikram pa ranjith

தங்கலான் டிரெய்லர் ரிலீஸ்: சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தங்கலான். சியான் விக்ரம் நடிப்பில் பீரியட் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் காட்டுவாசி கெட்டப்பில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோலார் தங்க வயலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்து இருந்தார்.

சியான் விக்ரம் வேறலெவல்: படத்தின் டிரெய்லர் தற்போது தாறுமாறாக வெளியாகி இருக்கிறது. ரத்தமும் வியர்வையும் சிந்தி சியான் விக்ரம் மட்டுமல்ல படத்தில் நடித்த பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலரும் மிரட்டியுள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

விக்ரம் நடிப்பு எப்படி?: தங்கலான் டீசரில் பாம்பை எல்லாம் கடித்து துப்பிய விக்ரம் டிரெய்லரில் பேசும் அந்த ஒரு வசனமே செம ஹைலைட்டாக உள்ளது. "சாவுக்கு பயந்தவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை" என்றும் வெள்ளைக்காரர்களுடன் சேர்ந்துக் கொண்டு தனது ஊர் மக்களை தங்கத்தை தேடி அந்த மலைக்கு செல்வதே சியான் விக்ரம் தான் என படத்தின் கதையை வெளிப்படையாக ரசிகர்கள் உணரும் வகையில் கட் செய்திருக்கிறார் பா. ரஞ்சித்.

thangalaan vikram pa ranjith

மாளவிகா மோகனன் மிரட்டல்: சியான் விக்ரமின் மனைவியாக பார்வதி நடித்துள்ளார். ஆனால், மாளவிகா மோகனன் சூனியக்காரியாக மாயாவியாக நடித்திருப்பது யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்டாக டிரெய்லரில் ரசிகர்களுக்கு அப்போ இது பேய் படமா பாஸ்? என்கிற கேள்வியை எழுப்புகிறது. சியான் விக்ரம் ஆங்கிலேயர்களுடன் மட்டுமின்றி சூனியக்காரி மாளவிகா மோகனனுடன் சண்டை போடும் காட்சிகள் எல்லாம் டிரெய்லரில் தாறுமாறாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X