தங்கலானுடன் மல்லுக்கு நிற்கும் வணங்கான்; ஓரமாக ஒதுங்கி வேடிக்கை பார்க்க புஷ்பா 2 படக்குழு முடிவு!
சென்னை: தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பலர் ரீ ரிலீஸில் கலக்கி வரும் நிலையில், ரிலீசுக்கே தடுமாறி வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பது நடிகர் விக்ரம் தான். இவரது நடிப்பில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான, துருவ நட்சத்திரம் படம் கடந்த சில ஆண்டுகளாகவே ரிலீஸ் ஆகாமல் உள்ளது. படத்தை ரிலீஸ் செய்ய இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பெரும் போராட்டமே நடத்தி வருகின்றார். இந்த வரிசையில் நீண்ட காலமாக ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களில் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தைக் குறிப்பிடலாம். இந்த படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரான நிலையில், ஜனவரியில் இருந்து நாட்கள் தள்ளித் தள்ளிப் போய் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவெடுத்திருந்த நிலையில், சில முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் செய்து இவ்வளவு நாள் காத்திருந்ததற்காக வசூலை வாரிக் குவிக்கலாம் என்ற திட்டத்தோடு இருந்த படக்குழுவுக்கு தற்போது அதிர்ச்சி தரும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படம்தான். இந்த படத்தில் ஏற்கனவே நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகினார். அதன் பின்னர் படப்பிடிப்பும் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இப்படியான நிலையில் சில பல காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் இந்த படத்தில் இணைந்தார் நடிகர் அருண் விஜய். இந்தப் படமும் ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், தற்போது படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாகவுள்ளது என்ற தகவல் உலா வருகின்றது.
மோதும் இயக்குநர்கள்: இதனடிப்படையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ் சினிமாவில் தங்களது படங்கள் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்களான பாலாவும் பா. ரஞ்சித்தும் நேருக்கு நேர் மோதவுள்ளனர். இப்படியான நிலையில், இந்த மோதலில் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தப் போவது யார்? வெல்லப்போவது யார் என்ற கேள்வி இப்போதே கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
புஷ்பா 2: ஏற்கனவே, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். இவருடன் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். புஷ்ப படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. ரிப்பீட் ஆடியன்ஸ் இந்த படத்திற்கு வந்து கொண்டே இருந்ததால் படம் கிட்டத்தட்ட 350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்தியா முழுவதுமே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தியா மட்டுமில்லாமல் புஷ்பா படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் உலகளாவிய ரசிகர் பட்டாளமும் இருந்தது.
கிருஸ்துமஸ் ரிலீஸ்? இப்படியான நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு படத்தை பட குழு தயாரித்துள்ளது. புஷ்பாபு படத்தில் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தங்கலான் மற்றும் வணங்கான் படங்கள் ரிலீஸ் ஆவதால், புஷ்பா 2 படத்தை தீபாவளி அல்லது கிருஸ்துமஸ்க்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது என கூறப்படுகின்றது.
More from Filmibeat
allu arjun pushpa 2 thangalan vanangaan arun vijay vikram pa ranjith bala புஷ்பா 2 அல்லு அர்ஜுன் பா ரஞ்சித் பாலா தங்கலான் வணங்கான் விக்ரம் அருண் விஜய்


Click it and Unblock the Notifications











