Thangalaan: தங்கலான் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்... பொங்கல் ரேஸில் இருந்து விலகிய சீயான் விக்ரம்!

சென்னை: விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான்.

பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள தங்கலான் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் டீசர் ரிலீஸையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 Thangalaan: Vikram starrer Thangalaan arriving at cinemas worldwide on 26th January

தங்கலான் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக மிரட்டிய விக்ரம், அடுத்த பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டார். பா ரஞ்சித்துடன் முதன்முறையாக இணைந்துள்ள விக்ரம், அவரது இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களங்களில் தனக்கே உரிய அடையாள அரசியலை பேசும் பா ரஞ்சித்தும், நடிப்பில் வெரைட்டியாக மிரட்டும் விக்ரமும் இணைந்துள்ளனர்.

இந்தக் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம், கேஜிஎஃப் எனப்படும் கோலார் சுரங்கத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பீரியட் ஜானரில் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள தங்கலானில் விக்ரம் நடிப்பு மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி தயாரிப்பாளர் தனஞ்செயன் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் 2024 ஜனவரி 26ம் தேதி வெளியாகவுள்ளது. பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கலான், அதிலிருந்து இரண்டு வாரங்கள் கழித்து ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 2024 பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினியின் லால் சலாம் படங்கள் வெளியாகவுள்ளன. அதனால் ஜனவரி 26ம் தேதி ரிலீஸுக்கு முடிவு செய்துள்ளது தங்கலான் படக்குழு.

அதேபோல், தங்கலான் டீசர் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தங்கலான் டீசர் நவம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இதனை நடிகர் விக்ரம் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் மிரட்டலான போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார். போஸ்டரிலேயே தங்கலான் படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Thangalaan: Vikram starrer Thangalaan arriving at cinemas worldwide on 26th January

தங்கலான் படத்தில் விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். விக்ரம், பா ரஞ்சித், ஜிவி பிரகாஷ் என இக்கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தங்கலான் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியானதால், விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X