விஜய் பிடிக்குமா?.. உதயநிதி ஸ்டாலின் பிடிக்குமா?.. தங்கம் தென்னரசு மகள் ரொம்ப உஷார்!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமானவரான நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா, தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்து இருக்கிறா. அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹார்ட்டின்' படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அடியெடுத்து வைக்கிறார். இப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'பிரேமம்' பட புகழ் ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
விஜய்யா? உதயநிதியா?: படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரின் மகள் இமயாவிடம், செய்தியாளர் ஒருவர், நீங்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருப்பதால் இந்தக் கேள்வியை நான் கேட்கிறேன். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதியும் ஹீரோதான், அதேபோல இப்போது அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்யும் மாஸ் ஹீரோதான். நீங்கள் இதில் யாருடைய படங்களை விரும்பிப் பார்ப்பீர்க உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? என கேட்டார். இந்த கேள்விக்கு நடிகை இமயா சற்றும் பதறாமல், நான் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை என்று ஒரே வரியில் புன்னகையோடு பதிலளித்தார்.

போயிடாதன்னு சொன்னாங்க: அரசியல் குடும்பப் பின்னணியைக் கொண்ட நீங்கள் சினிமாவுக்குள் வந்ததற்கு உங்கள் வீட்டில் என்ன சொன்னார்க? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆரம்பத்தில் நான் சினிமாவிற்குள் நுழைவதில் என் குடும்பத்தில் யாருக்குமே சுத்தமாக விருப்பமில்லை. சினிமாவுக்குப் போயிடவே போயிடாதே' என்றுதான் என்னிடம் சொன்னார்கள். ஆனால், எனக்குள் இருந்த நடிப்பு ஆர்வத்தால் நான் தொடர்ந்து பல வருடங்களாக முயற்சி செய்து கொண்டே இருந்தேன். என் விடாமுயற்சியை பார்த்துவிட்டு, நடிக்க அனுமதி கொடுத்தார்கள் என்றார். தங்கம் தென்னரசுவின் மகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 'ஹார்ட்டின்' திரைப்படம் ஜூன் 26ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications