»   »  தங்கமகனை நிறுத்து.. அனிருத்தைத் தாங்கிப் பிடிக்கும் தனுஷுக்குச் சிக்கல்!

தங்கமகனை நிறுத்து.. அனிருத்தைத் தாங்கிப் பிடிக்கும் தனுஷுக்குச் சிக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் அனிருத்தால் வந்துள்ள சிக்கல் தற்போது அவரது அண்ணனான தனுஷையும் பாதித்துள்ளது. அனிருத் இசையமைத்து தனுஷ் நடித்துள்ள தங்கமகன் படத்தை வெளியிடக் கூடாது என்று போராட்டம் கிளம்பியுள்ளது.

சிம்பு பாடி, அனிருத் இசையமைத்த ஒரு பாடல் இணையதளத்தில் லீக் ஆகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இருவருக்கும் எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன.


இவர்கள் மீது கோவை போலீஸில் புகாரும் தரப்பட்டுள்ளது. கோவை போலீஸாரும் இருவரையும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி சம்மன் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் அனிருத்தின் அண்ணன் முறை வரும் நடிகர் தனுஷுக்கு சிக்கல் வந்துள்ளது.


தங்கமகன்

தங்கமகன்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கமகன். இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத். படம் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் தங்கமகனுக்கு எதிராக போராட்டங்கள் கிளம்பியுள்ளன.


அனிருத் இசையமைத்த படத்தை விட மாட்டோம்

அனிருத் இசையமைத்த படத்தை விட மாட்டோம்

அனிருத் இசையமைப்பில் எது வந்தாலும் விட மாட்டோம். எதிர்ப்போம் என்று எதிர்ப்பாளரக்ள் கூறியுள்ளனர். அந்த வகையில் தங்கமகன் படத்தையும் திரையிடக் கூடாது. திரையிடுவதை எதிர்ப்போம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.


ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகம்

ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான சதா சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கமகன் திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும். திரையிடக் கூடாது. மீறித் திரையிட்டார் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம். திரையரங்கம் முன்பு போராடும் என்று தெரிவித்துள்ளார்.
தனுஷுக்குச் சிக்கல்

தனுஷுக்குச் சிக்கல்

இந்தப் போராட்ட அறிவிப்பால் தனுஷ் தரப்பு கவலை அடைந்துள்ளது. அனிருத்தை தம்பி தம்பி என்று பாசத்துடன் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்பவர் தனுஷ். இப்போது அவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.


English summary
Dhanush starrer Thangamagan is facing opposition from a fringe movement since the music of the movie is done by Anirduth.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil