twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல், சூர்யா, கார்த்தி எல்லாம் எதிர்க்குறாங்க.. இந்த பிரபல இயக்குநர் அந்த சட்டத்தை ஆதரித்தாரா?

    |

    சென்னை: ஒளிப்பதிவு சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஏகப்பட்ட நடிகர்களும் இயக்குநர்களும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

    Recommended Video

    'என் மீது அவதூறு பரப்புகிறார்கள்' - Director Thangar Bachan Speech | Oneindia Tamil

    இந்நிலையில், இயக்குநர் தங்கர் பச்சான் ஒன்றிய அரசு அமல்படுத்த உள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியான செய்தி கார்டால் பரபரப்பு கிளம்பியது.

    இந்த படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க... கூடவே மணிரத்னம் சாங்கை சேர்த்துக்கணும்... மாளவிகா பளீச் இந்த படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க... கூடவே மணிரத்னம் சாங்கை சேர்த்துக்கணும்... மாளவிகா பளீச்

    ஆனால், அப்படி நான் சொல்லவே இல்லை என்றும், அந்த செய்தி பொய்யானது என்றும் இயக்குநர் தங்கர் பச்சான் அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

    கருத்துரிமை பறிப்பு

    கருத்துரிமை பறிப்பு

    சினிமா படங்களை தணிக்கை செய்ய ஏற்கனவே தணிக்கை குழு இயங்கி வரும் நிலையில், அந்த குழு அனுமதித்த படங்களையும் ஆய்வு செய்து தடை செய்ய மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் மாற்றங்களுடன் உருவாகி உள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா அமல்படுத்தப்பட உள்ளது.

    பிரபலங்கள் எதிர்ப்பு

    பிரபலங்கள் எதிர்ப்பு

    நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி மற்றும் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்களும் இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

    மல்லுக்கு நின்ற பிரபலம்

    மல்லுக்கு நின்ற பிரபலம்

    நடிகர் சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த நிலையில், அவர்களை எதிர்த்து நடிகை காயத்ரி ரகுராம் ட்வீட்களை போட்டு வந்தார். நடிகை காயத்ரி ரகுராமை சூர்யா ரசிகர்கள் பதிலுக்கு ட்ரோல் செய்தனர்.

    தங்கர் பச்சான் ஆதரவா

    தங்கர் பச்சான் ஆதரவா

    இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து சட்டங்களையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என பிரபல இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்ததாக பிரபல செய்தி சேனலின் கார்டு போல வெளியான தகவலால் பெரும் பரபரப்பு கிளம்பியது.

    ஆதரிக்கவில்லை

    ஆதரிக்கவில்லை

    தான் சொல்லாத கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக தற்போது இயக்குநர் தங்கர் பச்சான் புகார் அளித்துள்ளார். மேலும், ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை தான் ஆதரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

    English summary
    Popular director Thangar Bachan denies the rumours and told he never support Cinematograph 2021 act.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X