TVK வென்டிலேட்டருடன் போராடுகிறது.. இப்படிபட்ட ஆட்சி தேவையா? தங்கர் பச்சான்!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை வென்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்கள் இல்லை என ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் ஆர். சி. ஆர்லோக்கர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால். இதனால் தவெக மற்ற கட்சிகளின் ஆதரவை கேட்டுள்ளது. காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ ஆதரவு தெரிவித்துவிட்ட நிலையில் விடுதலை சிறுத்தை இன்று தனது முடிவை அறிவிக்க உள்ளது.

இதனால், தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநருக்கு எதிராக பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது குறித்து இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான், விஜய் அவசர சிகிச்சை நோயாளியாக இருந்து கொண்டு தான் ஆட்சி அமைக்க வேண்டாம் என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

TVK Vijay Thangar Bachan
Photo Credit:

தங்கர் பச்சான்: அதில், தவெக ஆட்சி அமைக்கவும், திமுக, அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கவும் பெரும்பான்மை கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இரண்டுமே சாத்தியப்படாத நிலை தான் தற்பொழுது நிலவுகிறது. 0ஒருவேளை யார் குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளியை எப்படியாவது காப்பாற்ற செயற்கை காற்று மூலம் (வென்டிலேட்டர்) காப்பாற்றிக்கொள்ள போராடும் முயற்சி எப்படிப்பட்டதோ அதே நிலைதான் ஏற்படும்.

அவசர சிகிச்சை நோயாளி: நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் எனக் கூறுகிறார்களே. அதன் பொருள் என்ன தெரியுமா? எந்த நொடி வேண்டுமானாலும் செயற்கை மூச்சு தருவதை பிடுங்கி கொள்வோம் என்பதுதான். மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் சாத்தியம். மேற்சொன்ன நிலைக்குச் சென்று அவசர சிகிச்சை நோயாளியாக இருந்து கொண்டு தான் விஜய் ஆட்சி அமைக்க விரும்புகிறாரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X