For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திடீர் மருத்துவர்கள், வாட்ஸ் அப், டிவி, டாஸ்மாக், கொரோனா ... பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் காட்டம்!

  By
  |

  சென்னை: கொரோனா மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டு செல்லப் போகிறது என்று இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

  கொரோனா - TV SERIAL அவ்ளோதானா ! | TALKING 2 MUCH EP-3 | FILMIBEAT TAMIL

  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் உருவான இந்த வைரஸ், இத்தாலி, ஈரான் என பாதிப்பை ஏற்படுத்தியது.

  இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பாதிப்பில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் மரணம்.. திரைத்துறையினர் அதிர்ச்சி!கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் மரணம்.. திரைத்துறையினர் அதிர்ச்சி!

  மக்களின் மனநிலை

  மக்களின் மனநிலை

  இந்நிலையில் இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
  சமூக வலைத்தளங்கள் ஏற்கனவே பாதி பேரை அதற்கு அடிமையாக மாற்றி வைத்திருந்தது! போதாக்குறைக்கு இந்த 'கொரோனா' இருப்பவர்களையும் அவ்வாறு மாற்றாமல் போகாது போலிருக்கிறது. மூன்று வாரங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலையால் மக்களின் மனநிலை நெருக்கடிக்குள்ளாகி இருப்பதைக் கவனிக்கிறேன்.

  திடீர் மருத்துவர்கள்

  திடீர் மருத்துவர்கள்

  எவை எவற்றை வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம் என சிந்திக்கும் நிலையை பலர் இழந்துவிட்டதைக் காணமுடிகிறது. ஏற்கனவே யூடியூப் வரவால் பல திடீர் மருத்துவர்கள் உருவாகி இருந்தார்கள். இப்போது அப்படிபட்ட மருத்துவர்கள் மட்டுமே யூடியூப் எங்கும் நிரம்பிக் கிடக்கிறார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் உண்மையா பொய்யா எனக் கண்டறிவதும் இல்லை. ஒரு வேளை அதை அறிந்தாலும் மக்களுக்கு எடுத்துரைப்பாரும் எவருமில்லை.

  கொரோனா வரட்டும்

  கொரோனா வரட்டும்

  இதைப் பார்த்து 'எதையாவது அரைத்துத்தின்று எல்லாமும் கெட்டு நிற்பதை விட, கொரோனா வந்து விட்டுப் போகட்டுமே என எனது உறவினர் ஒருவர் உள்ளம் உடைந்து போய் சொல்கிறார். சமூக வலைத்தளங்களிலிருந்து தப்பித்து தொலைக்காட்சிக்குப் போனால் மீதி இருக்கிற உயிரும் சீக்கிரத்தில் போய்விடும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு கொரோனா செய்திகள், பீதியை கிளப்புகின்றன.

  வாட்ஸ்அப் கொடுமை

  வாட்ஸ்அப் கொடுமை

  இந்நிலையில் அரசுக்கு வருமானத்தை தந்த டாஸ்மாக் அடிமைகள் வீட்டுக்கொருவராவது இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்கு அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும் என்பதும் தெரியவில்லை. இவை இப்படியென்றால் வாட்ஸ்அப் கொடுமை, பெரும் கொடுமையாக இருக்கிறது. தனக்கு எது வந்தாலும் அதை உடனே பிறருக்கு தள்ளிவிட்டு உட்கார்ந்து விடும் போக்கினால் பொய்ச் செய்திகள் மட்டுமே உலவிக் கொண்டிருக்கின்றன.

  கணக்கற்ற நோய்கள்

  கணக்கற்ற நோய்கள்

  அந்தச் செய்திகளில் உண்மைத்தன்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை ஆராயாமல் பிறருக்குப் பகிர்வதை தயவு கூர்ந்து இனிமேலாவது கட்டுப்படுத்திக் கொள்வோம். மனித இனம் தோன்றி கணக்கற்ற நோய்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உருவாகி மனித உயிர்களை அழித்திருக்கின்றன. வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என அரசு கூறும் வழிமுறைகளையும், மருத்துவர்களின் பரிந்துரைகளையும் கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

  மிகப்பெரும் மாற்றம்

  மிகப்பெரும் மாற்றம்

  எது எப்படி இருந்தாலும் 'கொரோனா' மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டு செல்லப் போகிறது. மனித மனம், உடல், பிற உயிர்கள், இயற்கை என அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. நல்லதே நடக்கும் எனும் நம்பிக்கையில் எதிர்காலத்தை எதிர்கொள்வோம்! அது மட்டுமே இப்போது நம் கையில் இருக்கிறது' என்று அவர் கூறியுள்ளார்.

  English summary
  Director Thangar Bachan request everyone to maintain social distancing and follow it. Also should follow the directives given by the government.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X