twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எச்சரிக்கும் ‘செல்ஃபி‘… எதற்கு இப்படி ஒரு அறிக்கை… தங்கர்பச்சான் சொன்னது என்ன ?

    |

    சென்னை : ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் குறித்து இயக்குநர் தங்கர்பச்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    Recommended Video

    எனக்கும் வெற்றிமாறனுக்கு தான் போட்டி GV Prakash Speech Selfie Press Meet

    செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷ் அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ மேனன், வித்யா பிரதீப், வேங்கை சந்திரசேகர், சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறன் உதவியாளர் மதிமாறன் இயக்கி இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தமிழகத்தில் வெளியிடுகிறார்.

     நயன்தாராவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.. பிரபலம் பகிர்ந்த பகீர் தகவல்! நயன்தாராவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.. பிரபலம் பகிர்ந்த பகீர் தகவல்!

    கல்வி மாஃபியா

    கல்வி மாஃபியா

    கல்வி நிறுவன மோசடிகள், கல்லூரி வளாக அரசியல் குறித்து நிறைய படங்கள் வந்திருக்கிறது. ஆனால் செல்ஃபி திரைப்படம் கல்வி மாஃபியா கதை. மோசடிகள், மாணவர்களின் தற்கொலைகள், கொலைகள் மற்றும் அநியாயமான கல்லூரி கட்டணம் ஆகியவற்றை அம்பலப்படுத்தும் துணிச்சலான படமாக செல்ஃபி உருவாகி உள்ளது.

    எச்சரிக்கும் செல்ஃபி

    எச்சரிக்கும் செல்ஃபி

    இத்திரைப்படம் ஏப்ரல் 1ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படம் குறித்து, தங்கர்பச்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘எச்சரிக்கும் செல்பி‘ என்று பதிவிட்டு கல்விக்கூடங்கள்‌ அந்த கொள்ளையடிக்கும்‌ கூடங்களாக உருவாக்கப்பட்டப் பின்‌ தமிழ்‌ நாடு அதன்‌ கல்வியின்‌ தரத்தை இழந்து வருகின்றது. இந்த தனியார்‌ கல்விக்கூடங்கள்‌ எப்படிப்பட்ட தரகர்களை உருவாக்கி வைத்துள்ளது. இதில்‌ அப்பாவி பெற்றோர்களும்‌ மாணவர்களும்‌ தொடர்ந்து பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்‌.

    ஜிவி பிரகாஷின் அருமையான நடிப்பு

    ஜிவி பிரகாஷின் அருமையான நடிப்பு

    இந்த உண்மையை நேர்த்தியாக பொருள்‌ உரைக்க பதிவு செய்வது தான்‌ செல்ஃபி திரைப்படம்‌. மதிமாறன்‌ எனும்‌ புதிய இயக்குநரின்‌ ஆற்றலும்‌ திறமையும்‌ வியப்பில்‌ ஆழ்த்துகின்றன. அதேபோன்று அறிமுக நடிகரின்‌ இயல்பான மனம்‌ கவரும்‌ நடிப்பாற்றல்‌ நம்பிக்கை ஊட்டுகின்றன. ஜிவி பிரகாஷ்‌ முதன்மை பாத்திரத்தை தாங்கி நிற்கின்றார்‌. இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம்‌ அவரின்‌ திரைப்பயணத்தை மேலும்‌ விரிவுப்படுத்தும்‌. முழு திரைக்கதையின்‌ மையப்புள்ளியான எதிர்‌ நாயகன்‌ பாத்திரத்தில்‌ கவுதம்‌ மேனன்‌ நடிப்பு தான்‌ இத்திரைப்படத்தின்‌ கருவிற்கு மேலும்‌ வலுவூட்டுகின்றது.

    சிறு பிசுகில்லாமல்‌

    சிறு பிசுகில்லாமல்‌

    திரையில்‌ தோன்றும்‌ அனைத்து நடிகர்களும்‌ சிறு பிசுகில்லாமல்‌ நடிப்பது ஒன்றே இயக்குநரின்‌ திறனை பறை சாற்றும்‌. கடலூர்‌ மாவட்ட வட்டார வழக்கு மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.மக்களைக்‌ காப்பாற்றுவதாக கூறப்படும்‌ நான்கு தூண்களும்‌, அதன்‌ மீதான நம்பிக்கையினை இழந்து கொண்டிருக்கும்‌ நிலையில்‌ திரைப்படங்கள்‌ தான்‌ அரிதாக எப்பொழுதாவது சமூகத்தின்‌ சிக்கல்‌ சீர்கேடுகள்‌ குறித்து கேள்வி எழுப்புகின்றன. "செல்பி" அதனை திறம்பட செய்திருக்கிறது என்று படக்குழுவுக்கு பாராட்டை தெரிவித்தார்.

    English summary
    Thangarbachan praising statement About gv prakash in selfie movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X