Thani Oruvan 2: தனி ஒருவன் 2வில் வில்லனாகும் பாலிவுட் பிரபலம்.. ஜெயம் ரவிக்கு ஐஸ்வர்யா ராய் ஸ்கெட்ச்
சென்னை: ஜெயம் ரவி கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற திரைப்படம் தனி ஒருவன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ள நிலையில், இதில் வில்லனாக நடிக்க பாலிவுட் ஹீரோவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
ஜெயம் ரவிக்கு வில்லனாகும் பாலிவுட் பிரபலம்:2015ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை அவரது அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர். அதிகம் எதிர்பார்ப்பில்லாமல் வெளியான தனி ஒருவன் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது.

மேக்கிங், திரைக்கதை, பிஜிஎம் ஆகியவை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதைவிட முக்கியமாக அரவிந்த் சாமியின் வில்லத்தனம் தான் தனி ஒருவன் படத்தை கொண்டாட வைத்தது. சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியிருந்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தின் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்தார். ஜெயம் ரவியின் கேரக்டரை விடவும், அரவ்ந்த் சாமி ரோல் செம்ம மாஸ்ஸாக இருந்தது.
இந்நிலையில் தற்போது தனி ஒருவன் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க, அவரது அண்ணன் ராஜாவே இந்தப் படத்தையும் இயக்குகிறார். அதேபோல் நயன்தாரா ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். ஆனால் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கவில்லை என சொல்லப்படுகிரது. முதல் பாகத்தில் சித்தார்த் அபிமன்யூ கேரக்டரில் நடித்த அரவிந்த் சாமிக்குப் பதிலாக பாலிவுட் பிரபலம் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

அதன்படி, தனி ஒருவன் 2ம் பாகத்தில் அபிஷேக் பச்சனை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறதாம். அபிஷேக் பச்சன் ஓக்கே சொல்லும் பட்சத்தில் இந்தப் படம் பாலிவுட்டிலும் நல்ல ரீச் ஆகும் என படக்குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருந்தனர். அப்போது ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தான் அபிஷேக் பச்சனை தனி ஒருவன் 2ம் பாகத்தில் வில்லனாக நடிக்க வைக்கலாம் என ஜெயம் ரவி பிளான் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனுக்கு தமிழில் நல்ல என்ட்ரி கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளாராம். இந்நிலையில், ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் இன்னொரு நாயகியும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











